லைப் ஸ்டைல்

அட சீத்தாப்பழக் கொட்டையில இவ்வளவு விஷயம் இருக்கா..?

சீத்தாப்பழத்தின் நன்மைகள் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்..ஆனால், அந்த பழத்தின் கொட்டைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா..?, நாம் அனைவரும் குப்பையில் வீசும் அந்த கொட்டையில் பல நன்மைகள் இருக்கின்றன.

சீதாப்பழம் ஒரு சுவையான பழமாக மட்டுமல்லாமல், நம் தோல், முடி, கண்பார்வை, மூளை மற்றும் ஹீமோகுளோபின் அளவிற்கு நல்லது. 
சீதாப்பழம் அல்லது Custard Apple என்பது ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு சத்தான பழமாகும். இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை உள்ளன. இது 
சீதாப்பழ  சீசன் பருவம் என்பதால், உங்கள் உணவின் ஒரு பகுதியாக இதை சேர்த்துக்கொள்வது நல்லது.

சீதாப்பழம் என்பது அனைவரும் விரும்பக்கூடிய மிகவும் பிரபலமான ஒரு பழமாகும். சீதாப்பழத்தின் சுவை பற்றியும் அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம், ஆனால் ஒருபோதும் அதன் கொட்டைகளில் இருக்கும் நன்மைகளை பற்றி கேள்விப்பட்டிருக்கமாட்டோம். பல்வேறு பழங்களின் விதைகளை நாம் பயனற்றவை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் குப்பையில் எரியும் பழங்களின் விதைகள் உங்களுக்கு பல வகைகளில் உதவக்கூடும். அந்த வகையில் நீங்கள் வீணென்று நினைக்கும் சீதாப்பழத்தின் விதைகள் உங்களுக்கு நம்பமுடியாத நன்மைகளை வழங்கக்கூடும். இந்த வகையில் சீதாப்பழத்தின் கொட்டைகள் வழங்கும் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

தலைப்பேனை நீக்குகிறது:-

 பேன் மற்றும் ஈறுகளால் தலையை சொரிந்தே நீங்கள் சோர்வடைகிறீர்களா? இதை போக்க கடைகளில் கிடைக்கும் ஷாம்பூ மற்றும் எண்ணெய்களால் எந்த பயனும் கிடைக்கவில்லையா?. இந்த தொல்லையைப் போக்க சீதாப்பழ கொட்டைகளை பயன்படுத்துங்கள். இதனை தூளாக அரைத்து தண்ணீருடன் சேர்த்து பசை போல செய்து கொள்ளவும். இதனை தலையில் தடவி 10 நிமிடங்கள் ஊறவைக்கவும், பின்னர் குளிர்ந்த நீரில் அலசவும். இந்த செயல்முறையை மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால், பேன் தொல்லைகளில் இருந்து நிரந்தர தீர்வை பெறலாம்.

பூச்சிகளை விரட்டும்:-

 உங்கள் வீட்டில் பூச்சிகள் மற்றும் எறும்புகள் தொல்லை அதிகமாக இருந்தால் அதனை சரிசெய்ய இந்த கொட்டைகளை பயன்படுத்தலாம். கொட்டைகளை அரைத்து நீரில் ஊறவைத்து அதனை மூன்று நாட்கள் ஊறவிடுங்கள், பின்னர் அந்த கலவையை உங்கள் வீட்டில் பூச்சிகள் அதிகமிருக்கும் இடங்களில் வைக்கவும். இதனால் கிடைக்கும் பலன்கள் அற்புதமானவையாக இருக்கும்.


பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி இந்த கலவையை நீங்கள் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தலாம். தாவரங்களை உண்ணும் பூச்சிகளை விரட்ட 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை இதனை செடிகளுக்கு தெளிக்கவும். இது உங்கள் செடிகளை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்கும்

மருந்துகளில் பயன்பாடு:-

 இந்த பழத்தின் விதைகள் மருந்து நிறுவனங்களால் மருத்துவரீதியாக பரிசோதிக்கப்பட்ட அபோர்டிஃபேசியண்ட் பண்புகள் காரணமாக பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. கருக்கலைப்பிற்கு பயன்படுத்தப்படும் மருந்துகளில் இந்த விதைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எச்சரிக்கைகள்:-

 சீதாப்பழம் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததுதான், ஆனால் இந்த விதைகள் இயற்கையில் மிகவும் நச்சுத்தன்மையுடையவை மற்றும் இதன் தற்செயலான நுகர்வு கருக்கலைப்பை ஏற்படுத்தும், ஏனெனில் அவற்றில் சிறிதளவு விஷம் உள்ளது. இந்த விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள் கண்களில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இது தற்காலிக பார்வையிழப்பை ஏற்படுத்தும். எனவே இதனை எச்சரிக்கையுடன் பயன்படுத்தவும்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Dec-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate