அரசியல்

ஆட்டைய போட்டு எஸ்கேப் ஆகிய திமுக பிரமுகர்

திருப்பதி பெயரில் சீட்டு நடத்தி 50 லட்ச ரூபாய் பணத்துடன் சூலூர் திமுக பிரமுகர் மாயமாகியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பதி பெயரில் சீட்டு நடத்தி 50 லட்ச ரூபாய் பணத்துடன் சூலூர் திமுக பிரமுகர் மாயமாகியுள்ளார். சூலூரில் அரசு அனுமதியின்றி ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் வசூல் செய்த 50 லட்ச ரூபாய் பணத்துடன் சூலூர் நகர திமுக செயலாளர் ஜெயா மாயமாகி உள்ளதாக பொதுமக்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் நகர திமுக துணைச் செயலாளராக இருந்து வருபவர் இவர் திருப்பதி என்கிற பெயரில் 15 வருடமாக சீட்டு நடத்தி வருகிறார் சீட்டு தொகையை வசூலிக்கும் ஃபேஸ்புக்கில் வெங்கடாசலபதியின் படமும் இடம்பெற்றிருந்தது.  

சூலூர் மற்றும் ராமநாதபுரம் பகுதியில் பொதுமக்களிடம் மாதா மாதம் சீட்டு தவணைத் தொகையை வசூல் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக சீட்டை எடுத்து அவர்களுக்கு பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வரவே ஏலம் எடுத்தவர்கள் சிறு தொகையை தரும்படி ஜெயாவிடம் நெருக்கடி கொடுத்துள்ளனர்.  

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த வாடிக்கையாளர்கள் 60க்கும் மேற்பட்டோர் சூலூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் ஜெயா மாயமாகியது தெரிய வரவே அவரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.  80 லட்ச ரூபாய் சீட்டு பணத்துடன் திமுக பிரமுகர் எஸ்கேப் ஆன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை கண்ட  சமூக வலைத்தளவாசிகள் ஏமாற்றும் செயல் திமுகவிற்கு ஒன்றும் புதிதல்ல என்று  கூறி வருகின்றனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Dec-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate