லைப் ஸ்டைல்

தீபாவளி அன்று மட்டும் NO SANITIZERS

தீபாவளி கொண்டாட போகும் ஒவ்வொருவரும் சானிடைசரை தீபாவளி அன்று மட்டும் தூரமாக வைப்போம்

கொரோனா தொற்றுடன் நாம் கொண்டாட போகும் முதல் தீபாவளி இது தான். இந்த கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள  மாஸ்க், சானிடைசர் போன்றவைகளே  இது வரை இருக்கும் நம்மிடம் கவசகுண்டலங்கள். அப்படி மாஸ்க் போட்டுக்கொண்டு தீபாவளி கொண்டாடுவது நன்மை தான் அதே சானிடைசேர் வைத்துக்கொண்டு தீபாவளியை கொண்டாடினால் எற்படும் பேராபத்து என்னவென்று பார்க்கலாம்.

தீபாவளி என்பது இந்தியாவில் மிகப் பெரிய திருவிழா. இப் பண்டிகையில் பட்டாசு வெடிக்கும் போது சானிடைசர்களை கைகளில் பயன்படுத்த வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையின் போது சானிடிசர்களை விலக்கி வையுங்கள். குறிப்பாக விளக்கு, மெழுகுவர்த்திகள், பட்டாசுகள் போன்றவற்றிலிருந்து விலக்கி வையுங்கள். ஏனெனில் அவை எளிதில் தீ பிடிக்கும் தன்மைக் கொண்டவை. 

தீபாவளி என்பது தீபத்துடன் கொண்டாட கூடிய பண்டிகை எனவே ஒவ்வொரு செயலின்போதும் நாம் கவனத்துடன் இருக்கவேண்டியது நமது கடமை.  வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சூழலைப் பாதுகாத்தல் மற்றும் சுத்தப்படுத்துதல் போன்ற பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த தீபாவளி திருநாளில் புதிய ஆடைகளை அணிந்து, இனிப்புகளை சாப்பிட்டு, உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாகவும், முன்னெச்சரிக்கையாகவும் கொண்டாடுங்கள்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Dec-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
44470.26 44118.10
என்.எஸ்.இ
12962.80 13064.20
1 கிராம்
Rupee 4520 Gold Rate
8 கிராம்
Rupee 36160 Gold Rate
1 கிராம்
Rupee 63.30 Gold Rate
1 கிலோ
Rupee 63300 Gold Rate