Trending News

அபராதத் தொகை 10 கோடியே 10 ஆயிரத்தை செலுத்தினார் சசிகலா.., முன்கூட்டியே விடுதலை செய்யப் படுகிறாரா...?

சசிகலா ஆபாரத தொகை ரூபாய் 10 கோடியே 10 ஆயிரத்தை நீதிமன்றத்தில் செலுத்தி இருக்கிறார். அபராதம் செலுத்தப்பட்டிருப்பதால் இனி சசிகலாவை முடிந்த வரை விரைவாக வெளியே கொண்டு வர அவர் தரப்பு முனைப்பாக இருக்கிறது. மேலும், நீதிமன்றம் விதித்த அபராதத்தை முறையாக தான் செலுத்தி இருப்பதை குறிப்பிட்டுக் காட்டி விரைவில் சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

1991-96 காலக்கட்டத்தில் தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா  வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக அவர் மீது பாரதிய ஜனதாவை சேர்ந்த சுப்ரமணியசுவாமி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் 1996 -ஆம் ஆண்டு வாக்கில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையை நீதிமன்றம் முடுக்கி விட, விசாரணை பல வருடங்கள் தொடர்ந்து நடைபெற்றது.  தமிழகத்தில் நடைபெற்று வந்த விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றும்படி அப்போதைய தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து வழக்கு கர்நாடகத்திற்கு மாற்றப்பட்டது. 

18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு  2014, செப்டம்பர் மாதம்  முடிவுக்கு வந்தது.  சிறப்பு நீதி மன்றத்தின் நீதிபதி மைக்கேல் குன்கா  தீர்ப்பு நாளன்று குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயலலிதா , வி. கே. சசிகலா, வி. என். சுதாகரன் மற்றும் ஜெ. இளவரசி ஆகிய நால்வரையும் குற்றவாளிகளாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பில் மேல்முறையீட்டு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா  மீதான குற்றச்சாட்டை அரசு தரப்பு வழக்கறிஞர் நிரூபிக்கவில்லை எனக்கூறி விடுதலை செய்தார். 

நீதிபதியின் உத்தரவை எதிர்த்து கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதன் பின்
2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சசிகலா உட்பட நான்கு பேரையும்  குற்றவாளிகள் என்று அறிவித்தது.

அந்த நேரத்தில் ஜெயலலிதா இறந்துவிட்டதால் மீதமுள்ள மூன்று பேரும் சிறைக்கு சென்றனர். மேலும், ஜெயலலிதா  மட்டும் இறந்ததை அடுத்து வி. கே. சசிகலா, வி. என். சுதாகரன், ஜெ. இளவரசி ஆகிய மூன்று பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 10 கோடி அபராதமும் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து  உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, வி. கே. சசிகலா, வி. என். சுதாகரன் மற்றும் ஜெ. இளவரசி ஆகியோர் பரப்பன அக்ரகார மத்தியச் சிறைச்சாலையில் 15 பிப்ரவரி 2017 அன்று அடைக்கப்பட்டனர்.

 இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரின் தண்டனைக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது. இதற்கிடையில் சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு சிறை நிர்வாகம் பதிலளித்துள்ளது.

அதில், சசிகலா நீதிமன்றம் விதித்த அபராதத்  தொகையை நேரத்தில் செலுத்தினால் முன்கூட்டியே விடுதலை ஆக வாய்ப்புள்ளது என்றும், அபராதத்தை நேரத்தில் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டுக்  காலம் அவர் சிறையில் இருக்க நேரிடும் என்று, என்று குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், சசிகலா தரப்பு அபராதத்  தொகையை முன்கூட்டியே செலுத்தி அவரை வெளியே எடுக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதற்கான பணிகளை ஒரு மாத காலத்திற்கு முன்பே தொடங்கிய சசிகலா தரப்பு, அபராதத்  தொகையயை செலுத்த அனுமதி வழங்குமாறு பெங்களூரு தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவினை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதையடுத்து, சசிகலாவின் வழக்கறிஞர் முத்துக்குமார் நேற்று முன்தினம் அபராதம் செலுத்துவதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில்  தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் அபராத தொகை ரூபாய் 10 கோடியே 10 ஆயிரத்திற்கான வரைவோலையை வழக்கறிஞர்கள் முத்துக்குமார் மற்றும் செந்தூர் பாண்டியன் ஆகியோர் 4 வரைவோலைகளாக வழங்கியுள்ளனர். (அபராத தொகை நான்காக பிரிக்கப்பட்டு நான்கு பேர் கொடுக்கப்பட்டுள்ளது).

அபராதத்  தொகை எப்படி திரட்டப்பட்டுள்ளது என்பதன்  உண்மை தன்மையை  உறுதி செய்த நீதிமன்றம்  அதன் பின் அபராதத் தொகையை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது. இந்த தகவலை பரப்பன அக்ரஹாரா நீதிமன்றம் சிறை நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளது.

அபராதம் செலுத்தப்பட்டிருப்பதால் இனி சசிகலாவை முடிந்த வரை விரைவாக வெளியே கொண்டு வர அவர் தரப்பு முனைப்பாக இருக்கிறது. மேலும், நீதிமன்றம் விதித்த அபராதத்தை  முறையாக தான் செலுத்தி இருப்பதை குறிப்பிட்டுக் காட்டி  விரைவில் சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வார் என்றும்  எதிர்பார்க்கப்படுகிறது. 

சூழலைப் பார்த்தால் சசிகலா கூடிய விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.  

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate