Trending News

59வயதில் அடியெடுத்து வைக்கிறார் மரங்களின் நாயகன் விவேக்..!!

நகைச்சுவை கலைஞன் விவேக் இன்று தனது 59ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரைப்பற்றிய ஒரு தொகுப்பினை தற்போது பார்க்கலாம்.

பொதுவாக யாரென தெரியாத பெரிய பெரிய  ஆட்களை கூட  நமக்கு தெரியும் என்று நம்மில் பலரும் காட்டி கொள்வதுண்டு, அதுப்போல எனக்கு ஐ ஜியை தெரியும் ஆனா  ஐஜிக்கு என்ன தெரியாது என்று சொல்லிய நகைச்சுவை நாயகன் விவேக் தான் அது. 

தமிழ் திரைப்படத்துறையில் ‘சின்னக்கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக் , சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஆவார். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர்.






தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் திரைப்படத்துறை வரலாற்றிலேயே, நகைச்சுவை வாயிலாக சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்லுவதில் வல்லவர், ‘கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன்’ . அவரைப் பின்பற்றி, தான் நடித்த பெரும்பாலானப் படங்களில் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு, சமூக சிந்தனைக் கருத்துக்களைப் பெருமளவில் கடைபிடித்து, தமிழ் சினிமாவில் ‘சின்னக்கலைவாணர்’ எனப் போற்றப்பட்டார் நடிகர் விவேக்.  

திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கி கௌரவித்தது. ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு தமிழ் சினிமாவில் நகைச்சுவையோடு கலந்த பல சமூகக் கருத்துக்களை விதைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறந்த நகைச்சுவை கலைஞனாக தன்னுடைய ஆளுமையை கோலோச்சி வரும் விவேக் திரைத்துறைக்கு ஆற்றிய பங்கு அளப்பரியது. 

தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வரும் விவேக் , ‘நாட்டில் வறட்சி ஏற்பட்டதற்கு நாம்தான் காரணம், வறட்சியைப் போக்கும் வகையில் சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவேன்’ எனக்கூறி அவ்வப்போது இத்திட்டத்தினை செயல்படுத்தி மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார். விவேக் ஒரு நல்ல நடிகர் மட்டும் அல்ல நல்ல மனிதனும் தான் என்பதைனையும் நிரூபித்து வருகிறார். அப்பேற்பட்ட ஒரு சிறந்த மனிதனின் பிறந்தநாள் இன்று

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Dec-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
44470.26 44118.10
என்.எஸ்.இ
12962.80 13064.20
1 கிராம்
Rupee 4520 Gold Rate
8 கிராம்
Rupee 36160 Gold Rate
1 கிராம்
Rupee 63.30 Gold Rate
1 கிலோ
Rupee 63300 Gold Rate