விளையாட்டு

ஜப்பான் டேபிள் டென்னிஸ் போட்டி: தமிழக வீரர் சத்யன் பங்கேற்பு

ஜப்பானில் உள்ள ஒகியாமாவில் நடைபெறும் லீக் டேபிள் டென்னிஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த சத்யன் பங்கேற்கிறார்.

சென்னை:-

இந்தியாவின் முன்னணி டேபிள் டென்னிஸ் வீரர்களில் ஒருவர் ஜி.சத்யன். தமிழகத்தை சேர்ந்த அவர் இந்திய அளவில் தரவரிசையில் 32-வது இடத்தில் உள்ளார். இந்த நிலையில் ஜப்பானில் உள்ள ஒகியாமாவில் நடைபெறும் லீக் போட்டியில் சென்னையை சேர்ந்த சத்யன் பங்கேற்கிறார். இதற்காக வருகிற 23-ந் தேதி ஜப்பான் புறப்பட்டு செல்கிறார்.

சத்யன் தனது கிளப்புக்காக 8 ஆட்டங்களில் விளையாடுகிறார். முதல் போட்டி டிசம்பர் 10-ந் தேதி நடக்கிறது. டிசம்பர் 30-ந் தேதி அவர் நாடு திரும்புகிறார். இதுகுறித்து சத்யன் கூறும்போது, ‘நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இந்த போட்டியில் ஜப்பான், கொரியாவை சேர்ந்த முன்னணி டேபிள் டென்னிஸ் வீரர்கள் பங்கேற்பார்கள். என்னால் சில வீரர்களை தோற்கடித்து அதிர்ச்சி அளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்றார். சத்யன் சமீபத்தில் நடந்த போலாந்து லீக் போட்டியில் 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate