அரசியல்

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்: கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடைபெறுகிறது..!!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் இப்போதிலிருந்தே தங்களை தயார் படுத்தி வருகின்றன. அந்த வகையில், ஆளும் அதிமுக வரும் சட்டமன்ற தேர்தலிலும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடைபெறவிருக்கிறது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் இல்லாமல் அ.தி.மு.க. முதல் முறையாக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. எனவே அ.தி.மு.க. கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அ.தி.மு.க.வில் கட்சி ரீதியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

மேலும் புதிய மாவட்ட செயலாளர்களும், மண்டல பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகளை கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அ.தி.மு.க. அமைச்சர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. 

இதன்படி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு, கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
25-Nov-2020
பெட்ரோல்
Rupee 84.64(லி) Diesel Rate
டீசல்
Rupee 76.88(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44601.63 44247.12
என்.எஸ்.இ
12978.00 13079.10
1 கிராம்
Rupee 4640 Gold Rate
8 கிராம்
Rupee 37120 Gold Rate
1 கிராம்
Rupee 64.50 Gold Rate
1 கிலோ
Rupee 64500 Gold Rate