ஆன்மிகம்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது..!!

இந்தாண்டிற்கான கார்த்திகை தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அண்ணாமலையார் சன்னதி அருகே 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

திருவண்ணாமலை:- 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை திருவிழாவையொட்டி எல்லை தெய்வ வழிபாட்டின் 3-ம் நாளான நேற்று விநாயகர் உற்சவம் நடந்தது.

இந்நிலையில் இந்தாண்டிற்கான கார்த்திகை தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அண்ணாமலையார் சன்னதி அருகே 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

இதனையடுத்து 10 நாட்களுக்கு இரவும் பகலும் இவ்விழா நடைபெறுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பத்து நாட்கள் காலையும், மாலையும் கோவிலில் உள்ள ஐந்தாம் பிரகாரத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் நாளான வரும் 29ஆம் தேதி காலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மகா தீபம் ஏற்றப்படும் நாளில் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபத் திருநாளன்று பக்தர்கள் கிரிவலம் செல்லவும் , மலை ஏறவும் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Dec-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
44470.26 44118.10
என்.எஸ்.இ
12962.80 13064.20
1 கிராம்
Rupee 4520 Gold Rate
8 கிராம்
Rupee 36160 Gold Rate
1 கிராம்
Rupee 63.30 Gold Rate
1 கிலோ
Rupee 63300 Gold Rate