கல்வி & வேலைவாய்ப்ப

தேசிய திறனாய்வுத் தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு

தேசிய திறனாய்வுத் தேர்வு(NTSC) வரும் டிசம்பர் 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை:-

10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் சிறந்த மாணவர்களை தேர்வுசெய்து அவர்களின் மேற்படிப்புக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நோக்கில் ஆண்டுதோறும் தேசிய திறனாய்வுத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வை என்சிஇஆர்டி எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நடத்துகிறது. 

இந்த தேர்வானது 2 நிலைகளை உள்ளடக்கியது. முதல்கட்ட தேர்வு மாநில அளவிலும், அதில்தேர்ச்சி பெறுவோருக்கு 2-வது கட்டமாக தேசிய அளவிலும் தேர்வு நடைபெறும்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு(NTSC) வரும் டிசம்பர் 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு எழுத ஆர்வமுள்ள மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய திறனாய்வுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் போது மாதம்தோறும் ரூ.1,250-ம், அதன்பிறகு இளங்கலை, முதுகலை பட்டப் படிப்பு படிக்கும்போது மாதம்தோறும் ரூ.2,000-ம் வழங்கப்படும். மேலும், பிஎச்டி படிப்புக்கும் உதவித்தொகை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Dec-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
44470.26 44118.10
என்.எஸ்.இ
12962.80 13064.20
1 கிராம்
Rupee 4520 Gold Rate
8 கிராம்
Rupee 36160 Gold Rate
1 கிராம்
Rupee 63.30 Gold Rate
1 கிலோ
Rupee 63300 Gold Rate