தமிழ்நாடு

போராடி மீட்கப்பட்ட கன்றுக்குட்டி

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கண்டிகை பகுதியில் உள்ள 150 அடி ஆழம் கொண்ட கல்குவாரியில் தவறி விழுந்த கன்றுக்குட்டியை நேற்றிரவு 3 மணி நேரமாக போராடி தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கண்டிகை 
அருகே  மல்ரோசபுரம் பகுதி உள்ளது. இந்தப் பகுதியை ஒட்டியபடி 150 அடி ஆழம் கொண்ட பாழடைந்த கல்குவாரி ஒன்று உள்ளது. இதில் கடந்த 18ஆம் தேதி மாலை,  அப்பகுதியில் தாய் பசு மாட்டுடடன் மேய்ந்து கொண்டிருந்த கன்றுக்குட்டி எதிர்பாராதவிதமாக தவறி கல்குவாரியில் விழுந்தது,

அந்த பகுதி வழியாக சென்ற அக்கம்பக்கத்தினர், இச்சம்பவம் குறித்து கன்னுக்குட்டி தவறிவிழுந்தை பார்த்து  தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.  உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் கன்னுக்குட்டியை மீட்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.  

இதனையடுத்து 3 மணி நேர போராட்டத்திற்கு பின்பு கயிறு கட்டி கன்றுக்குட்டியை போராடி மீட்டனர், பின்னர் அந்தக் கன்று குட்டியை தாய் பசு உடன் அனுப்பி வைத்தனர், 

குவாரிக்குள் தவறி விழுந்த கன்றுக்குட்டியால்  அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Dec-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
44470.26 44118.10
என்.எஸ்.இ
12962.80 13064.20
1 கிராம்
Rupee 4520 Gold Rate
8 கிராம்
Rupee 36160 Gold Rate
1 கிராம்
Rupee 63.30 Gold Rate
1 கிலோ
Rupee 63300 Gold Rate