Just In

விஸ்கான்சின் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

வாஷிங்டன்:-

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் மில்வாக்கி என்ற நகரத்தில் அமைந்துள்ள மேஃபேர் மால் என்ற வணிக வளாகத்தில் நேற்று மாலை புகுந்த ஒரு இளைஞர் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்த நபர்களில் ஏழு பெரியவர்கள் மற்றும் ஒரு இளைஞன் என்று பொலீசார் தெரிவித்தனர். 


அவர்களின் காயங்களின் தீவிரம் குறித்து உடனடியாகத் தெரியவில்லை. எனினும்,  காயம் அடைந்தவர்கள் எவருக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்று வாயுவாடோசா நகர மேயர் டென்னிஸ் மெக்பிரைட் தெரிவித்தார்.
 
இதனிடையே, துப்பாக்கிச்சூடு நடைபெற்றதும் குறிப்பிட்ட வணிக வளாகத்திற்கு விரைந்த போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.  துப்பாக்கி சூடு நடத்திய நபர் தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தாக்குதல் நடத்திய நபரின் வயது 20 முதல் 30- வயதுடைய வெள்ளை இனத்தவர் என்று என நேரில் பார்த்தவர்கள் போலீசாரிடம் கூறி உள்ளனர். அவரது அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை. நேரில் பார்த்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல என்றும், வணிக வளாகத்தின் நுழைவு வாயிலில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
25-Nov-2020
பெட்ரோல்
Rupee 84.64(லி) Diesel Rate
டீசல்
Rupee 76.88(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44601.63 44247.12
என்.எஸ்.இ
12978.00 13079.10
1 கிராம்
Rupee 4640 Gold Rate
8 கிராம்
Rupee 37120 Gold Rate
1 கிராம்
Rupee 64.50 Gold Rate
1 கிலோ
Rupee 64500 Gold Rate