சினிமா

ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் புகைப்படங்கள்

வெளிநாடு பயணம் சென்றுள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் பிகினி புகைப்படம் ரசிகர்களின் கண்களுக்கு குளுர்ச்சியாக அமைந்துள்ளது.

மாலே:-

மாலத்தீவு சென்றுள்ள ரகுல் ப்ரீத் சிங் இதுவரை இல்லாத அளவுக்கு செம தாராளம் காட்டி  வெளியிட்டுள்ள ஹாட் பிகினி புகைப்படம் செம டிரெண்டாகி வருகிறது. இதனால் ரகுல் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகைகளையும், மாலத்தீவையும் பிரிக்க முடியாது போலிருக்கிறது. பெரும்பாலும்,  அவர்கள் ஓய்வெடுக்க விரும்பினால் உடனடியாக மாலத்தீவிற்குப் பறந்துவிடுகிறார்கள். 

சமீபத்தில் விவாகம் முடித்த நடிகை காஜல் அகர்வால் தேனிலவிற்காக கணவர் கௌதம் உடன் சென்றனர். தினமும் விதவிதமான புகைப்படங்களைப் பகிர்ந்து வந்தார் காஜல் அகர்வால். முன்னதாக இந்த கொரானோ தொற்று இருக்கும் காலத்திலும் சில வாரங்களுக்கு முன்பு நடிகை டாப்சி தனது காதலருடன் அங்கு ஓய்வெடுக்கச் சென்றார். விதவிதமான புகைப்படங்களைப் பகிர்ந்தார்.

தமிழ், ஹிந்தி, தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது தனது விடுமுறைக்காக குடும்பத்தினருடன் மாலத்தீவிற்குச் சென்றுள்ளார். அங்குள்ள அழகிய தீவில் ரிசார்ட் ஒன்றில் விடுமுறையை ஹாயாக கழித்து வருகிறார். 


மேலும், ஸ்விம் சூட்டில் அவர் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும், நீச்சல் உடை அணிந்த யோகா செய்யும் புகைப்படம் ஒன்றை நேற்றுப் பகிர்ந்திருந்தார்.


ஆகையால், அடுத்த சில நாட்களுக்கு ரகுலிடம் இருந்து இன்னும் அதிகமான புகைப்படங்களை எதிர்பார்க்கலாம் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில்  இன்று பிகினி உடை புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். 


இந்தப் புகைப்படத்தை எடுத்தது தனது அப்பா தான் எனவும் தெரிவித்துள்ளார் ரகுல். ஒருபுறம் இவற்றை ரசிகர்கள் ரசித்தாலும் மறுபுறம் இவற்றை விமர்சித்தும் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Dec-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
44470.26 44118.10
என்.எஸ்.இ
12962.80 13064.20
1 கிராம்
Rupee 4520 Gold Rate
8 கிராம்
Rupee 36160 Gold Rate
1 கிராம்
Rupee 63.30 Gold Rate
1 கிலோ
Rupee 63300 Gold Rate