உலகம்

டொனால்டு டிரம்ப் ஜூனியருக்கு கொரோனா தொற்று உறுதி

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மூத்த மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வாஷிங்டன்:-

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மூத்த மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர்   (வயது 42) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அறிகுறிகள் எதுவும் இன்றி அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது மருத்துவ வழிகாட்டுதல்களை பின்பற்றி வருவதாகவும் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

அதேபோல், டிரம்பின் தனிப்பட்ட  வழக்கறிஞர்  ருடி கியுலியனியின் மகன் ஆண்ட்ரூ கியுலியானியும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப், இளைய மகன் பாரன் டிரம்ப் ஆகியோர் தொற்று பாதிக்கப்பட்டு பின்னர் குணம் அடைந்தனர். அதேபோல டொனால்டு ஜூனியரின் பெண் தோழியும், முன்னாள் ஃபாக்ஸ் நியூஸ் தொகுப்பாளருமான கிம்பர்லி கில்ஃபோயலும் கடந்த ஜூலை மாதம் தொற்றால் பாதிக்கப்பட்டார்.

டிரம்ப் ஜூனியர் தனது தந்தையின் மிகவும் வெளிப்படையான மற்றும் ஆக்ரோஷமான பாதுகாவலர்களில் ஒருவர் ஆவர். அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜோ பைடன் வெற்றி பெற்றதை தந்தை டிரம்ப் போல தனயன் டிரம்பும் அங்கீகரிக்க மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Dec-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
44470.26 44118.10
என்.எஸ்.இ
12962.80 13064.20
1 கிராம்
Rupee 4520 Gold Rate
8 கிராம்
Rupee 36160 Gold Rate
1 கிராம்
Rupee 63.30 Gold Rate
1 கிலோ
Rupee 63300 Gold Rate