உலகம்

உடல் அமைப்பிற்கு ஏற்றவாறு தள்ளுபடி வழங்கும் மலேசிய உணவகம்!

மலேசியா நாட்டில் உள்ள உணவகம் வாடிக்கையாளர்களின் உடல் அளவிற்கு தகுந்தவாறு தள்ளுபடி வழங்கி வருகிறது.

கோலாலம்பூர்:-

ஒவ்வொரு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவர விதமான சலுகைகளை வழங்கும். அந்தவகையில் மலேசியாவை சேர்ந்த மங்கோலியன் மாஸ்டர் என்ற உணவகம் அங்கு வரும் வாடிக்கையாளர்களின் உடல் அளவிற்கு தகுந்தவாறு விலை தள்ளுபடி வழங்கி வருகிறது.

அதன்படி அந்த உணவகத்தில் வைக்கப்பட்டுள்ள கம்பிகள் வழியாக வாடிக்கையாளர்கள் செல்ல வேண்டும். இந்த கம்பிகளில் எது வாடிக்கையாளர்களின் உடல் அளவிற்கு பொருந்துகிறதோ அதற்கு தகுந்தபடி 10%, 20%, 30%, 50% மற்றும் 100% என்று தள்ளுபடிகள் வழங்குகிறது.

இதுகுறித்து உணவகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:- 

எங்கள் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் உடல் நலத்தை கவனத்தில் கொள்வதற்காக இந்த ஏற்பாடு செய்துள்ளோம். அதிக பருமன் கொண்ட நபர்களுக்கு குறைந்த தள்ளுபடியம், உடல் பருமன் இல்லாதவர்களுக்கு முழுவதுமாக தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இவ்வாறு செய்வதன் மூலமாக வாடிக்கையாளர்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தனர்.

முன்னதாக, சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள உணவகம் ஒன்றும் இவ்வாறான சலுகைகள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது அந்த உணவகத்தில் 6 இன்ச் இடைவெளி உள்ள தடுப்புகளை வெளியே செல்லும் நபர்களுக்கு உணவு இலவசமாக வழங்கப்படும். அதேபோல 7 இன்ச் இடைவெளி வழியே செல்பவர்களுக்கு 5 பீர் பாட்டில் இலவசமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Dec-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
44470.26 44118.10
என்.எஸ்.இ
12962.80 13064.20
1 கிராம்
Rupee 4520 Gold Rate
8 கிராம்
Rupee 36160 Gold Rate
1 கிராம்
Rupee 63.30 Gold Rate
1 கிலோ
Rupee 63300 Gold Rate