உலகம்

49 ஆண்டுகளுக்கு பிறகு பிரிட்டன் தொழிலாளர் கட்சியில் இருந்து விலகிய மேக்நாத் தேசாய்- இனவெறி காரணமா??

பிரிட்டன் தொழிலாளர் கட்சியில் இருந்து 49 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய வம்சாவளியை சேர்ந்த பொருளாதார நிபுணரான மேக்நாத் தேசாய், விலகிய காரணம் வெளியாகியுள்ளது.

லண்டன்:-

இந்திய வம்சாவளி எழுத்தாளர் மற்றும் பொருளாதார நிபுணர் லார்ட் மேக்நாத் தேசாய் இனவெறி காரணங்க இங்கிலாந்தின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

பிரிட்டன் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் முக்கிய தலைவராக விளங்கியவர் மேக்நாத் தேசாய் (வயது 80). இந்திய வம்சாவளி பொருளாதார நிபுணரும் எழுத்தாளருமான மேக்நாத் தேசாய், பிரபுக்கள் சபையின் உறுப்பினராக பதவி வகித்து வந்தார். 

இந்நிலையில், மேக்நாத் தேசாய், தொழிலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விகுவதாக அறிவித்துள்ளார். கட்சிக்குள் தலைதூக்கிய இனவெறியை தடுப்பதில் கட்சி தலைமை தோல்வி அடைந்துவிட்டதால் இந்த முடிவை எடுத்ததாக கூறி உள்ளார். அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கட்சி தலைமை கேட்டுக்கொண்டது. எனினும், அவர் பிரபுக்கள் சபை தொழிலாளர் கட்சி தலைவருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளார். 

இதுபற்றி மேக்நாத் தேசாய் கூறுகையில்:-

இதுவரை தொழிலாளர் கட்சியின் ஆதரவாளராக மட்டுமே இருந்தேன். ஆனால், கட்சியின் முன்னாள் தலைவர் ஜெர்மி கோர்பின், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக நாட்டின் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவால் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அவர் 19 நாட்கள் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு பிறகு மீண்டும் சேர்க்கப்பட்டார். இதனால் 49 ஆண்டுகளுக்கு பிறகு நான் கட்சியில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

எந்த மன்னிப்பும் இல்லாமல் அவரை திரும்ப கட்சியில் அனுமதித்தது மிகவும் விசித்திரமான முடிவு. கட்சியில் இனவெறி  புகுத்தப்பட்டது எனக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தியது. யூத எம்.பி.க்கள் மோசமாக நடத்தப்பட்டனர், வெளிப்படையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர். பெண் உறுப்பினர்கள் மோசமாக கேலிகிண்டல் செய்யப்பட்டனர், இந்த இனவெறி காரணமாகவே வெளியேறினேன் என்றார்.

தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக சர் கெய்ர் ஸ்டார்மர் பொறுப்பேற்றுள்ளார். சமத்துவ மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரையை தொடர்ந்து, கடந்த மாதம் கோர்பினை இடைநீக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Dec-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
44470.26 44118.10
என்.எஸ்.இ
12962.80 13064.20
1 கிராம்
Rupee 4520 Gold Rate
8 கிராம்
Rupee 36160 Gold Rate
1 கிராம்
Rupee 63.30 Gold Rate
1 கிலோ
Rupee 63300 Gold Rate