உலகம்

பாகிஸ்தான் பிரதமர் சபதம் செய்ததை தொடர்ந்து காபூல் மீது 23 ராக்கெட்டு தாக்குதல்

ஆப்கானிஸ்தானுக்கு உதவ "எல்லாவற்றையும் செய்வேன்" என்று பாகிஸ்தான் பிரதமர் சபதம் செய்ததை அடுத்து தலைநகர் காபூலில் 23 ராக்கெட்டு தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

காபூல்:-

ஆப்கானிஸ்தான் தலைநகரின் காபூலில்  பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட 23 ராக்கெட் தாக்குதல்களில் மோதியதில் 8 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆப்கானிஸ்தானில் வன்முறையைத் தடுக்க "எல்லாவற்றையும்" செய்வதாக உறுதியளித்த சில நாட்களில், காபூலின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆப்கன் உள்துறை விவகார அமைச்சகம் மற்றும் டோலோ செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கை படி:-

காபூல், சாஹர் காலா, போக்குவரத்து ரவுண்டானா, பி.டி 4 இல் குல்-இ-சுர்க் ரவுண்டானா, செடரத் ரவுண்டானா, நகரின் மையத்தில் உள்ள ஸ்பின்சார் சாலை, அருகே உள்ள வஜீர் அக்பர் கான் மற்றும் ஷாஹர்-இ-நவ், பி.டி 2 இல் தேசிய காப்பக சாலை, மற்றும் காபூலின் வடக்கில் லைசி மரியம் சந்தை மற்றும் பஞ்ச்சாத் பகுதிகளில் இந்த ராக்கெட்டு தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

இந்த தாக்குதலில் தங்கள் ஈடுபடவில்லை என்று  தலிபான்கள் மறுத்துள்ளார். 

இதனிடையே, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தானில் சுமார் 6,500 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர், அவர்களில் பெரும்பாலோர் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி) அமைப்பை  சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
25-Nov-2020
பெட்ரோல்
Rupee 84.64(லி) Diesel Rate
டீசல்
Rupee 76.88(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44601.63 44247.12
என்.எஸ்.இ
12978.00 13079.10
1 கிராம்
Rupee 4640 Gold Rate
8 கிராம்
Rupee 37120 Gold Rate
1 கிராம்
Rupee 64.50 Gold Rate
1 கிலோ
Rupee 64500 Gold Rate