தமிழ்நாடு

திமுகவிற்கு என்ன தகுதி இருக்கிறது- அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அமித்ஷாவை தமிழக வருகையை ஒட்டி லைவ் அப்டேட்ஸ்.

சென்னை:-

மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான அமித்ஷா, 2 நாள் பயணமாக இன்று சென்னை வந்துள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்த அவருக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், பாஜக தலைவர்கள் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோர் சென்னை விமனா நிலையத்திற்கு சென்று வரவேற்றனர்.

சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் விழாவில், ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கரூர் நஞ்சை புகலூரில் ரூ.406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.கோவை-அவிநாசி சாலையில் ரூ.1,620 கோடியில் உயர்மட்ட சாலை திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டினார். 

அதனையடுத்து, கண்ணன்கோட்டை, தேர்வாய்கண்டிகையில் 380 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய நீர்தேக்கத்தை அமித்ஷா நாட்டுக்கு அர்பணித்தார். அதன்பிறகு, சென்னை தொடங்கப்படவிருக்கும் 61,843 கோடி ரூபாய் மதிப்பிலான மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

அமித் ஷா உரை:- 

திமுக கட்சியினர் அடிக்கடி மத்திய அரசு தமிழகத்திற்கு அநீதி இழைத்துள்ளதாக  குறைகூறி வருகிறார்கள். முன்பு 10 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக தமிழகத்திற்கு செய்தவற்றை பட்டியலிட தயார் விவாதிக்க திமுக  தயாரா?? கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்கு மன்மோகன் சிங் அரசு ரூபாய் 16,155 கோடி தான் ஒதுக்கீடு செய்தது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 32, 850 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

மேலும், வாரிசு அரசியலை படிப்படியாக பாஜக ஒலித்து வருகிறது குடும்ப அரசியல் நடத்தி வரும் கட்சிகளுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளார்கள். ஊழல் பற்றி பேச திமுகவிற்கு என்ன தகுதி இருக்கிறது ஊழல் குற்றச்சாட்டை முன் வைப்பதற்கு முன் உங்கள் குடும்பத்தை முதலில் திரும்பிப் பாருங்கள்.

மோடி தலைமையிலான மத்திய அரசு தான் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது என்றார். 
இதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவுக்கு விநாயகர் சிலை ஒன்றை பரிசாக வழங்கினார். அதேபோல, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நடராஜர் சிலையை அமித்ஷாவுக்கு பரிசாக வழங்கினார்.

லீலா பேலஸ் திரும்பும் அவர், அங்கு பாஜக நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பில் வரும்  2021 தேர்தல் குறித்த முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Dec-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate