இந்தியா

அகதிகள் மறுவாழ்வு பணிகளுக்கு கடும் எதிர்ப்பு... திரிபுரா போராட்டம்

திரிபுராவில் புரு அகதிகளின் மறுவாழ்வு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தினால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு.

அகர்தலா:-

வடக்கு திரிபுராவில் இன்று நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதால்  போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் பலர் காயமடைந்தனர், இதில்  ஐந்து பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மிசோ பழங்குடியினருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக மிசோரத்திலிருந்து புரு பழங்குடியின மக்கள் 1997 ஆம் ஆண்டு வெளியேறி திரிபுராவில் தஞ்சமடைந்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்த சுமார் 35,000 அகதிகள் திரிபுராவில் நிரந்தரமாக தங்குவதற்குவதற்கான மறுவாழ்வு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. 

இதற்கான ஒப்பந்தம் டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, திரிபுரா, மிசோராம் மாநில முதல்-மந்திரிகள் மற்றும் புரு பிரதிநிதிகள்  முன்னிலையில் கையெழுத்தானது. இதனையடுத்து புரு அகதிகளுக்கான மறுவாழ்வுக்கான பணிகள் தொடங்கி உள்ளன.

மத்திய அரசின் முடிவை எதிர்த்து திரிபுரா மக்கள் போராட்டத்தில் இறங்கியதால்  ஏற்பட்டுள்ள பதற்றம் பொதுமக்களின்  வாழ்க்கையை முடக்கியது. கடந்த திங்கள்கிழமை முதல், மாணவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 12,000 முதல் 15,000 போராட்டக்காரர்கள் அரசாங்க அலுவலகங்கள் மற்றும் முக்கிய இடங்கள் முன்னால் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், புரு அகதிகளுக்கான மறுவாழ்வு நடவடிக்கையை கண்டித்து வடக்கு திரிபுரா மாவட்டத்தின் டோலுபரி கிராமத்தில் இன்று ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலையில் ஒன்று திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

போராட்டக்காரர்கள் திரண்டதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் எச்சரித்தும், போராட்டக்காரர்கள் கலைந்துசெல்லாதால் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் விரட்டியடித்தனர்.

இதனிடையே, கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 45 வயதான ஸ்ரீகாந்த தாஸ் என்பவர் உயிரிழந்தார், மேலும் 5 பேர் பலத்த காயமடைந்தனர். இதனால் தற்போது திரிபுராவில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Dec-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
44470.26 44118.10
என்.எஸ்.இ
12962.80 13064.20
1 கிராம்
Rupee 4520 Gold Rate
8 கிராம்
Rupee 36160 Gold Rate
1 கிராம்
Rupee 63.30 Gold Rate
1 கிலோ
Rupee 63300 Gold Rate