சினிமா

மீண்டும் இந்தியன்-2 படப்பிடிப்பு துவக்கம்?

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு பல்வேறு தடைகளுக்கு பிறகு மீண்டும் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை:-

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன்-2 படப்பிடிப்பு கடந்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கியது. ஆனால் கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லை என்று இயக்குனர் ஷங்கர் படப்பிடிப்பை நிறுத்தி வைத்தார். 

அதன்பிறகு ஈ.வி.பி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பை தொடங்கியபோது கிரேன் சரிந்து விழுந்து  உயிரிழப்பு ஏற்பட்டது. இதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பை முடக்கியது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் கமல்ஹாசன் நடிக்க தயாராகி உள்ளார். அதோடு, பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். 

இதனால் இந்தியன் 2 படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதில் கேள்விக்குறி ஏற்பட்டது. இயக்குனர் ஷங்கரும் படத்தில் இருந்து விலகுவதாக தயாரிப்பு நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியதாகவும் தகவல் வெளியானது. லைக்கா நிறுவனமும் தயாரிப்பை கைவிடுவதாக தகவல்கள் உலா வந்தன. ஆனால் பட குழு இவற்றை மறுத்தது. 

இந்நிலையில் இந்தியன்-2 படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் விக்ரம், இந்தியன்-2 ஆகிய இரண்டு படங்களிலும் மாறி மாறி நடிக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Dec-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
44470.26 44118.10
என்.எஸ்.இ
12962.80 13064.20
1 கிராம்
Rupee 4520 Gold Rate
8 கிராம்
Rupee 36160 Gold Rate
1 கிராம்
Rupee 63.30 Gold Rate
1 கிலோ
Rupee 63300 Gold Rate