தமிழ்நாடு

அமித் ஷாவிடம் முதல்வர் பழனிசாமி வைத்த மூன்று கோரிக்கைகள் என்ன???

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூன்று கோரிக்கைகளை வைத்தார். அந்த கோரிக்கைகள் என்ன என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை:-

தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம்  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூன்று கோரிக்கைகள்  அடங்கிய கடிதத்தை அளித்தார். அந்த கோரிக்கைகள் என்னவென்ற தகவல் வெளியாகியுள்ளது.

நதி இணைப்பு:-

கோதாவரி-காவிரி இணைப்பு, காவிரி- குண்டாறு இணைப்பு உள்ளிட்ட முக்கிய நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என்று அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்துள்ளார் 
 
மேலும், நடந்தாய் வாழி காவேரி திட்டத்திற்கு 10 ஆயிரத்து 700 கோடி நிதி கோரப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டம்:-

சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்திற்கு மத்திய அரசு 50 சதவீதம் முதலீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

டெக்ஸ்டைல் பூங்கா:-

தருமபுரி, விருதுநகரில் மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்க மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு பூங்கா:-

அதேபோல சென்னை அருகே மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு பூங்கா அமைக்கவும் மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Dec-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
44470.26 44118.10
என்.எஸ்.இ
12962.80 13064.20
1 கிராம்
Rupee 4520 Gold Rate
8 கிராம்
Rupee 36160 Gold Rate
1 கிராம்
Rupee 63.30 Gold Rate
1 கிலோ
Rupee 63300 Gold Rate