உலகம்

லெபனானில் சிறையை தகர்த்து தப்பியோடிய 69 கைதிகள்- 5 பேர் உயிரிழப்பு

லெபனான் நாட்டில் சிறையை உடைத்து 69 கைதிகள் தப்பியோடி உள்ளனர். அவர்களில் 5 பேர் விபத்தில் உயிரிழந்தனர்.

பெய்ரூட்:- 

மத்திய கிழக்கு நாடான லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் கிழக்கே பாப்டா சிறைச்சாலையில் இருந்து அதிகாலையில்  69 கைதிகள் சிறை கதவுகளை உடைத்து கொண்டு தப்பினர், அவர்களில் 15 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், கைதிகளில் சிலர் காரில் தப்பியோடியுள்ளனர்.  ஆனால் அவர்களின் கார் மரம் ஒன்றின் மீது மோதி விபத்தில் சிக்கியதில் 5 கைதிகள் உயிரிழந்தனர்.  சிறையை உடைத்து கைதிகள் தப்பியது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


லெபனான் நாட்டில் கொரோனா வைரசின் பாதிப்புகளை முன்னிட்டு நெருக்கடியான சிறைகளில் உள்ள கைதிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஏப்ரலில் கைதிகளின் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

மேலும், லெபனான் சிறைக்குள் கைதிகளிடையே கலகங்களும் ஏற்படுவதுண்டு. அதேபோல, கடந்த ஏப்ரல் மாதம், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் லெபனான்  சிறை கைதிகள் விஷயத்தில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரியது.

இதனை முன்னிட்டு கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்தது. எனினும், அதிக தண்டனை காலம் அனுபவித்த கைதிகளை முன்னுரிமை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Dec-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate