சினிமா

எங்கெல்லாம் அநீதி தலைதூக்குகிறதோ அங்கு நான் இருப்பேன்- மாநாடு சிம்பு செகண்ட் லுக்

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 'மாநாடு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியான நிலையில் செகண்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை:-

சுசீந்திரன் இயக்கத்தில் 'ஈஸ்வரன்' படத்தை முடித்துவிட்டு, நீண்டகாலமாக வெங்கட் பிரபு இயக்கி வரும் 'மாநாடு' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. தற்போது புதுச்சேரியில் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் 24-ம் தேதி வரை இந்தப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று காலை வெளியிடப்பட்ட நிலையில் தற்போது சிம்புவின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதில் "அநீதி எப்போது எழும்புகிறதோ, நான் அங்கு இருப்பேன்-அப்துல் காலித் " என்று கூறி சிம்பு வெளியிட்டுள்ளார். இஸ்லாத்திற்கு மாறிய யுவன் சங்கர் ராஜா தனது பெயரை அப்துல் காலித் என்று மாற்றியுள்ளார். அதே பெயரில் தான் சிம்பு இந்த படத்தில் நடிக்கிறார்.

முழுக்க அரசியலைக் களமாகக் கொண்ட இந்தப் படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், மனோஜ், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் சிம்புவுடன் நடித்து வருகிறார்கள்.

ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன், இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Dec-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate