அரசியல்

உழைப்பவர்களுக்கு இளைப்பாற உரிமை உண்டு- ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்

கடமையைச் செய்பவர்கள் ஓய்வு எடுத்து கொள்ளவும், உழைப்பைக் கொடுப்பவர்கள் இளைப்பாறவும் உரிமை உண்டு என்று காவல் துறை குறித்து ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை:-

ஓய்வோ பணிநேரமோ இன்றி பணியாற்றும் காவல்துறையினருக்கும் வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது சமோகவலைத்தள பக்கத்தில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில்:-

காவல்துறையினருக்கு மட்டும் திட்டவட்டமான பணி நேரமோ ஓய்வு ஒழிச்சலோ கிடையாது. இதை மாற்ற வேண்டுமென்று பேச்சு எழுந்திருக்கிறது. கடமையைச் செய்பவர்களுக்கு ஓய்வு கொள்ளவும், உழைப்பைக் கொடுப்பவர்களுக்கு இளைப்பாறவும் உரிமை உண்டு. 

சுழற்சி முறையிலோ வேறு விதத்திலோ பிற அரசு ஊழியர்கள் போல் காவல் துறையினருக்கும் ஓய்வு கொடுக்க முன் வந்துள்ளது பாராட்டுக்குரியது. வெறும் பேச்சாய் இல்லாமல் இது நடைமுறைப் படுத்தப்படவும் வேண்டும் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
23-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee