ஆன்மிகம்

தொழிலில் லாபம் பெருக சொல்ல வேண்டிய ஸ்ரீனிவாச பெருமாள் ஸ்லோகம்

செய்யும் தொழில் லாபம் பெருக சொல்ல வேண்டிய திருப்பதி ஏழுமலையான் ஸ்ரீனிவாச பெருமாள் ஸ்லோகம்.

திருப்பதியில் குடி கொண்டிருக்கும் திருமலையான் வெங்கடாசலபதி ஸ்ரீனிவாச பெருமாளுக்கு உரிய ஸ்லோகம் ஸ்லோகத்தை நம் தினமும் சொல்லி வந்தால் தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல லாபங்கள் பெருகும், வறுமை நீங்கும். அதுமட்டுமல்லாமல் ஸ்லோகத்தை சொன்னால்  புதன், சனி உள்ளிட்ட கிரகங்களின் பாதிப்புகளும் நம்மை விட்டு விலகும்.

ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்
ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே

மேற்கண்ட ஸ்லோகத்தின் பொருள்:-

திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீனிவாசப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம் என்பதே இந்த ஸ்லோகத்தின் பொதுவான பொருளாகும்.

இந்த ஸ்ரீனிவாச பெருமாளுக்கு உரிய ஸ்லோகத்தை தினமும் காலையில் 27 முறை துதிப்பது நன்மைகளைத் தரும். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு தீபமேற்றி, இனிப்பு நைவேத்தியம் வைக்க வேண்டும், இந்த மந்திரத்தை 108 முறை அல்லது 1008 முறை ஜெபித்து வழிபடுவதால் தொழில் மற்றும் வியாபாரங்களில் தடைகள் அகன்று லாபங்கள் பெருகும். 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee