மனுஸ்மிருதி தொடர்பான பாடல் மருதநாயகம் படத்தில் வைக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி ம.நீ.ம. தலைவர் கமலஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
மனுஸ்மிருதி தொடர்பான பாடல் மருதநாயகம் படத்தில் வைக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி ம.நீ.ம. தலைவர் கமலஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை:-
மனுஸ்மிருதி தொடர்பான சர்ச்சை எழுந்த போது மனுநீதி என்பது புழக்கத்தில் இல்லை. எனவே அதுபற்றி விளக்கம் அளிக்கத் தேவையில்லை என்று கமல்ஹாசன் கூறினார்.
இந்நிலையில் கமலின் கனவு படமான மருதநாயகம் படத்தில் மனுஸ்மிருதி குறித்து பாடல் வைக்கப்பட்டதை ஏன்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கமலஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
கமல் அளித்த விளக்கத்தில்:-
மருதநாயகம் திரைப்படம் 17ஆம் நூற்றாண்டில் நடைபெறும் கதை என்பதால் அவ்வாறு பாடல் எழுதப்பட்டது. அதேசமயம் மனுதர்ம புத்தகம் புழக்கத்தில் இல்லை என்பது உண்மை. அதேபோல அது தேவையில்லை என்பதும் மிகப்பெரிய உண்மை என்று கமல் பதில் அளித்தார்.