சினிமா

தொடர்ந்து முடிவுகளை மாற்றும் கமல்; குழப்பம் ஏற்படுத்தும் அறிவிப்புகள்

கமலின் ட்விட்டர் பதிவுகளை விட அதிகம் மக்களை குழப்ப ஆரம்பித்துள்ள கமல்ஹாசன் படம் தொடர்பான அறிவிப்புகள்.

சென்னை:-

சினிமா, அரசியல், சின்ன திரையில் பிக் பாஸ் என ஒரே நேரத்தில் 3 குதிரைகளில் பயணம் செய்கிறார் கமல். தற்போது அரசியலில் தீவிர கவனம் செலுத்தும் அதேவேளையில் புதிய படங்களுக்கான படப்பிடிப்புகளுக்கு தயாராகி வருகிறார்.

கமல்ஹாசன் நடித்து கடைசியாக 2018 ஆகஸ்ட்டில் விஸ்வரூபம் 2 படம் வெளியானது. ஆனால் அந்தப்படம் போதிய  வரவேற்பை பெறாமல் வந்து போனது அவ்வளவே.

அப்படத்திற்குப் பின் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அதோடு, முன்னர் அறிவிக்கப்பட்ட தலைவன் இருக்கின்றான் படத்தையும் ஆரம்பிக்கத் திட்டமிட்டார் கமல். அப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கப் போவதாகவும் அறிவித்தார்.

இந்தியன் 2 படப்பிடிப்பு கடந்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கியது. கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லை என்று இயக்குனர் ஷங்கர் படப்பிடிப்பை நிறுத்தி வைத்தார். பின்னர் ஈ.வி.பி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பை தொடங்கியபோது கிரேன் சரிந்து விழுந்து  உயிரிழப்பு ஏற்பட்டது. இதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பை முடக்கியது.

இதனிடையே கமல் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள "விக்ரம்" படத்தின் டீசரை சமீபத்தில் வெளியிட்டார்கள். 

இந்நிலையில், இந்தியன் 2, தலைவன் இருக்கின்றான் ஆகிய படங்களைத் தள்ளி வைத்துவிட்டு விக்ரம் படத்தில் கமல் நடித்து முடிப்பார் என எதிர்பார்த்தார்கள். ஆனால், இந்தியன் 2 படத்தைத் தயாரிப்பு நிறுவனம் உடனடியாக மீண்டும் ஆரம்பிக்கவில்லை என்றால் வேறு படத்தை இயக்கும் முடிவில் இயக்குனர் ஷங்கர் இருந்ததாகத் தகவல் வெளியானது.  படம் கைவிடப்படலாம் என்ற தகவலும் வெளியானது. அதோடு அப்படத்தில் நடித்த காஜல் அகர்வால் திருமணம் வேறு முடிந்துள்ளது.

அதன்பின் இந்தியன் 2 பற்றிய பேச்சுவார்த்தை நடந்துள்ளது. கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்கு கால்ஷீட் தர சம்மதித்துவிட்டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதன்பிறகே விக்ரம் படத்தின் படப்பிடிப்பில்கமல் கலந்து கொள்ள உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இந்த குழப்பங்களுக்கெல்லாம் மத்தியில் கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்காவில் சபாஷ் நாயுடு படப்பிடிப்பை ஆரம்பித்தார் கமல்ஹாசன். அதன் பிறகு கமலுக்கு விபத்து ஏற்பட்டது. ஆனால் அதன் பிறகு  அந்த படம் என்ன ஆனது என்றுதான் இதுவரை தெரியவில்லை.

வழக்கமாக கமல்ஹாசனின் ட்விட்கள் தான் புரியாமல் மக்களை குழம்பும் என்பார்கள் தற்போது கமல் நடைக்கும் படங்களின் அறிவிப்புகளும் மக்களை குழப்ப ஆரம்பித்துள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
19-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee