அரசியல்

பணம் கட்ட முடியலேன எதுக்கு படிக்கணும் - மருத்துவ மாணவர்களை இழிவுபடுத்திய துரை முருகன்

மருத்துவக்கல்லூரிகளில் 7.5% இட ஒதுக்கீடு தொடர்பாக மாணவர்களை இழிவு படுத்தும் விதமாக துரை முருகன் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

“மருத்துவக் கல்லூரிகளில் 7.5% இடஒதுக்கீட்டில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும் என்றும்  உதவித்தொகை கிடைக்கும் வரை காத்திருக்காமல், சுழல் நிதியில் பணம் செலுத்தப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் அறிவித்தார். 

இந்த நிலையில், இந்த கல்வி ஆண்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப்பள்ளி மாணவர்களின் கட்டணத்தையும் திமுக ஏற்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். 

இப்படி இருக்கையில் நிருபர் ஒருவர் துரை முருகனிடம்  ஒரு வேளை அரசு மருத்துவ கல்லூரியில் சேரும்  மாணவர்கள் 40000 கட்டணம் கட்ட முடியல னா திமுக வ அனுகலாமா.!?  என்ற கேள்விக்கு , 40,000 கூட கட்ட முடிலனா எதுக்கு மருத்துவம் படிக்கணும் என்று கூறியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

மாணவர்களின் கல்விக்கட்டணம் தொடர்பாக தலைவர் ஒரு கருத்தையும்,  மாணவர்களை இழிவு படுத்தி  பேசிய பொருளாளர் வேறு கருத்தையும்  தெரிவித்தது குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதன் மூலம் திமுக இரட்டை வேடம் போடுவதும், அரசியல் லாபத்திற்காக தமிழக அரசு கட்டணத்தை ஏற்க போகிறது என்ற செய்தியை  முன்கூட்டியே அறிந்து கொண்டு, முந்திக்கொண்டு  இதுபோல அறிவிப்பை வெளியிட்டதும், மாணவர்களின்  எதிர்காலத்தில் விளையாடுவதும் மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளதாக சமூக வலைத்தளவாசிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee