தொழில்நுட்பம்

அன்டர் டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பத்துடன் கூடிய அசத்தல் ஸ்மார்ட்போனை உருவாக்கும் சாம்சங்...!!

புதிய கேலக்ஸி இசட் போல்டு 3 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் அன்டர் டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எஸ்21 சீரிஸ் தவிர சாம்சங் மடிக்கக்கூடிய கேலக்ஸி இசட் போல்டு 3 ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 

இந்நிலையில், புதிய கேலக்ஸி இசட் போல்டு 3 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் அன்டர் டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல் உண்மையாகும் பட்சத்தில் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கு இந்த கேமரா தொழில்நுட்பத்தை சாம்சங் வழங்குவது இதுவே முதல் முறையாக இருக்கும். இதுவரை சில ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கின்றன.

அந்த வகையில் புதிய அன்டர் டிஸ்ப்ளே சிஸ்டம் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. இதனை சரி செய்யும் வகையில் கேலக்ஸி இசட் போல்டு 3 மாடலில் சிறப்பான சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதற்கென சாம்சங் பிரத்யேக டிஸ்ப்ளே டிசைன் பயன்படுத்தலாம் என தெரிகிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee