Just In

"கொரோனா தடுப்பு மருந்தை போட்டுக் கொள்ளும் கடைசி நபர் நானாக தான் இருக்க வேண்டும்" - ஜக்கி வாசுதேவ்

இந்த நோய்த்தொற்று காலத்தில் மக்கள் நலனுக்காக தங்கள் உயிரை துச்சமென கருதி களப்பணியாற்றி வரும் சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஆகியோருக்கு தான் கொரோனா தடுப்பு மருந்தை முதலில் கொடுக்க வேண்டும் என்று ஜக்கி வாசுதேவ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூருவில் கடந்த சில தினங்களுக்கு முன் bangalore tech summit  என்ற தொழில்நுட்ப மாநாடு நடைப்பெற்றது. அதில் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றிய சத்குரு, "கொரோனா தடுப்பு  மருந்தை பெற்றுக் கொள்ளும் கடைசி நபராக நான் இருக்க விரும்பிக்கறேன். தங்கள் உயிரை துச்சமென கருதி பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் காவல்துறையினர் ஆகியோருக்கு தான் கொரோனா தடுப்பு மருந்தை முதலில் வழங்க வேண்டும். நோய்எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் வயதானவர்கள் மற்றும் பிற நோய்களால் அவதிப்படும் மக்களுக்கு மருந்தில் முன்னுரிமை வழங்க வேண்டும்.  

நாட்டில் தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வந்தவுடன் அதில் ஊழல் நடக்க அதிக வாய்ப்புள்ளது. அதனால், அரசாங்கம் மக்களின் பொருளாதார நிலைக்கேற்ப மருந்தின் விலையை நிர்ணயிக்க வேண்டும்" என்றார்.   

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
19-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee