உலகம்

நிலவில் இருந்து பாறை துகள்களை எடுத்து வர விண்கலத்தை செலுத்தியது சீனா

கிட்டத்தட்ட 45 ஆண்டுகளில் முதன்முறையாக நிலவில் இருந்து பாறை துகள்களை பூமிக்கு எடுத்து வருவதற்காக முயற்சியாக விண்கலத்தை வெற்றிகரமாக சீனா விண்ணில் செலுத்தியது.

பெய்ஜிங்:-

அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் வரிசையில் சீனாவும் நிலவை ஆராய்ச்சி செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் 1976-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சீனா நிலவிலிருந்து பாறை துகள்ளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்ய உள்ளது.

பண்டைய சீனாவின் நிலவின் கடவுளான பெயரில் இந்த சாங் -5 என்கிற ஆளில்லா விண்கலத்தை சீனா இன்று அதிகாலை விண்ணில் செலுத்தியது. அந்த நாட்டின் தெற்கு ஹனைன் மாகாணத்தில் உள்ள வென்சாங் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் 5 ராக்கெட் மூலம் சேஞ்ச் 5 விண்கலம் நிலவுக்கு புறப்பட்டது.  

நிலவில் இருந்து வெற்றிகரமாக பாறை துகள்களை பூமிக்கு எடுத்து வரும் விண்கலம், டிசம்பரில் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விண்கலம் மூலம் நிலவில் இதுவரை ஆய்வு செய்யப்படாத  பகுதியான ‘ஓஷன் ஆப் ஸ்டார்ம்ஸ்’ என்ற பகுதியிலிருந்து 2 கிலோ பாறை துகள்ளை எடுக்க சீனா திட்டமிட்டுள்ளது. சீனாவின் இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால் அமெரிக்கா ரஷியாவிற்கு பிறகு நிலவில் உள்ள பாறைகளை ஆராய்ச்சி செய்யும் 3-வது நாடு என்ற பெருமையை சீனா பெறும்.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
23-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee