உலகம்

தமிழகம் புதுச்சேரி அச்சுறுத்தும் நிவர் புயல்; நிவர் என்றால் என்ன???

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருப்பெற்றுள்ளது. இதற்கு நிவர் என்று பெயரிடப்பட்டுள்ளது. நிவர் என்றால் என்ன?

சென்னை:- 

தற்பொழுது தமிழகம் மற்றும் புதுச்சேரியை அச்சுறுத்தி வரும் புயலுக்கு என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு "நிவர்" என்ற பெயரை ஈரான் நாடு வழங்கியது. 

ஈரானிய மொழியில் நிவர் என்றால் "வெளிச்சம்" என்று பொருள். வட இந்திய பெருங்கடலில் உருவாகும் புயலுக்காக உருவாக்கப்பட்ட புது பெயர் பட்டியலில் மூன்றாவது பெயராக இது இருக்கிறது. 

இந்த வருடம் மேற்கு வங்கத்தையும், வங்கதேசத்தை பெரிதும் சேதமாக்கிய அம்பான்(உம்பான்) புயலுக்கு தாய்லாந்து பெயர் வைத்தது. கடந்த ஜூன் மாதம் மஹாராஷ்ட்ராவில் கரையை கடந்த நிஷாக்ரா புயலின் பெயரை வங்கதேசம் பரிந்துரை செய்தது. 

இதேபோல, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அரபிய கடலில் உருவாகி சோமாலியாவில் கரையை கடந்த கதி புயலுக்கு இந்தியாவின் பரிந்துரை செய்த பெயர் வைக்கப்பட்டது.

வட இந்திய பெருங்கடலில், அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா உள்ளிட்ட கடலோர பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு வங்கதேசம், இந்தியா, மாலத்தீவு, மியான்மர், ஒமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, ஈரான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் உள்ளிட்ட 13 நாடுகள்தான் இணைந்து புது புது பெயர்களை பரிந்துரை செய்கின்றன. 

மேற்கண்ட நாடுகள் சார்பில் 172 பெயர்கள் புயலுக்கு சூட்டபட்டுள்ளன. ஒரு நாடு 13 பெயர்களை பரிந்துரை செய்வதற்கு பல நிபந்தனைகளும் உள்ளன. பொதுவாக புயலுக்கு குறிப்பிடபடும் பெயரில் அரசியல், கலாச்சாரம், மத நம்பிக்கை கலக்காமல் பொதுவானதாக இருக்க வேண்டும். 

உலக மக்கள் எவரின் மனதையும் புண்படுத்தும் நோக்கில் அப்பெயர் இருக்கக்கூடாது. மேலும், பெயரின் அளவு அதிகபட்ச 8 எழுத்துகள் தான் இருக்க வேண்டும். அதோடு, அனைத்து தரப்பு மக்களாலும் எளிதில் உச்சரிக்கும்படி இருக்க வேண்டும். முக்கியமாக வட இந்திய பெருங்கடலில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பெயர்கள், மீண்டும் பயன்படுத்தபட முடியாது.

அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் உருவாகும் புயலுக்கு மாலத்தீவு பரிந்துரை செய்த புரேவி என்னும் பெயர் சூட்டப்படும். கதி, தேஜ், முரசு, ஆக், நீர் ஆகிய பெயர்களை இந்தியா, அடுத்து வர இருக்கும் புயல்களுக்கு பெயர் சூட்ட பரிந்துரை செய்துள்ளது. இந்த அமைப்பில் இருக்கும் நாடுகளின் பெயர்கள் ஆல்ஃபபெட்டிகல் ஆர்டரில் அதாவது பெயரின் அடிப்படையில் இருக்கும். 

அந்தந்த நாடு பரிந்துரை செய்யும் புயலுக்கான 13 பெயர்கள் பட்டியலில் வரிசையாக இருக்கும். மொத்தமாக 169 பெயர்கள் இடம்பெற்றிருக்கும். அவற்றிலிருந்து ஒவ்வொரு புயலுக்கும் ஒவ்வொரு நாட்டின் பரிந்துரைபடி அதில் இடம்பெற்றிருக்கும் பெயர்கள் பயன்படுத்தப்படும். 

இது போல அடுத்த 25 வருடங்களில் வரப்போகும் புயலுக்கான பெயர் பட்டியல் உலக வானிலை ஆராய்ச்சி மையத்திடம் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
23-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee