ஒரு நாள் சுற்றுப்பயணமாக இன்று திருப்பதிக்கு வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்மாவதி தாயாரை தரிசித்த பின்னர் ஏழுமலையானை வழிபட்டார்.
சாமி தரிசனத்திற்காக சென்னையில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் அடைந்த ஜனாதிபதியை ஆந்திர ஆளுநர், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு சென்ற ராம்நாத் கோவிந்த் பத்மாவதி தாயாரை வழிபட்டார்.
தொடர்ந்து திருப்பதி மலைக்கு சென்ற அவர் சற்று நேர ஓய்வுக்கு பின் திருப்பதி மலையில் உள்ள வராக சாமி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். பின்னர் ஏழுமலையான் கோவிலுக்கு சென்று அவருக்கு கோவில் முன் வாசலில் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இஸ்திகாபால் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஏழுமலையானை வழிபட்ட ஜனாதிபதிக்கு கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினார். பின்னர் தேவஸ்தானம் சார்பில் ஜனாதிபதிக்கு தீர்த்த பிரசாதங்கள், நினைவு பரிசுகள் ஆகியவை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டன