சினிமா

நிவர் எல்லாம் சும்மா மாலத்தீவை மையம் கொண்டுள்ள சமந்தா புயல்

மாலத்தீவுக்குச் சென்றிருக்கும் சமந்தா அங்கு எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்திருந்த சமந்தா, மீண்டும் தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோரும் நடிக்கின்றனர். கொரோனா ஊரடங்கில் வீட்டில் தங்கியிருந்த சமந்தா, அரசு தளர்வுகள் அளித்து படப்பிடிப்பு தொடங்கியதும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் சிறப்பு தொகுப்பாளராக கலந்து கொண்டார்.  

தெலுங்கில் சாம் ஜாம் என்ற இணைய நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் சமந்தா. தற்போது குடும்பத்துடன் மாலத்தீவுக்குச் சென்றிருக்கும் சமந்தா அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். சமந்தா பதிவிடும் போட்டோக்கள் ரசிகர்களின் லைக்ஸை குவித்து வருகிறது. சமந்தாவின் புகைப்படங்களை எல்லாம் பார்த்த சமந்தாவின் ரசிகர்கள் நிவர் எல்லாம் எங்கள் தலைவிக்கு முன்னால் சும்மா என்று கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் காஜல் அவர் கணவருடன் மாலத்தீவிற்கு ஹனிமூன் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
25-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee