Just In

22 அடியை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி; 11 மணிக்கு மேல் ஏரி திறக்கப்படுகிறது

24 அடி கொண்ட சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.55 அடியாக அதிகரித்துள்ளதால் 11 மணிக்கு மேல் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை:-

நிவர் புயல் காரணமாக சென்னையில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களுள் ஒன்றான 24 அடி முழு கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.55 அடியாக அதிகரித்துள்ளது. மழை தொடர்ந்து பெய்தால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை விரைவில் எட்ட வாய்ப்பு உள்ளது.

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 230 கனஅடியில் இருந்து 1,096 கனஅடியாக அதிகரித்துள்ளது. 24 அடி நீர்மட்டம் கொண்ட செம்பரம்பாக்கத்தில் 22 அடியை தாண்டினால் தண்ணீர் திறக்கப்படும். 

இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.55 அடியாக உள்ளது. மழை தொடர்ந்து பெய்தால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை விரைவில் எட்ட வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் கனமழை தொடரும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 22 அடியை நெருங்கியது. இதனால் 11 மணிக்கு மேல் ஏரியை திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

நிவர் புயல் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் நேற்று ஒரே நாளில் 10 செ.மீ. மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
23-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee