தமிழ்நாடு

நிவர் புயல்; புறநகர் சிறப்பு ரயில்களுக்கான முக்கிய அறிவிப்பு

நிவர் புயல் காரணமாக புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் புறநகர் சிறப்பு ரயில்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை:-

நிவர் புயல் காரணமாக சென்னையில் இயக்கப்படும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேசமயம்  காலை 10:00 மணி வரை புறநகர் சிறப்பு ரயில்கள்  இயக்கப்படுவதாக சென்னை கோட்டம் மக்கள் தொடர்பு அதிகாரி அ. ஏழுமலை தெரிவித்துள்ளார்.

நிவர் புயல் காரணமாக இன்று (25.11.2020) காலை 10:00 மணி வரை இயக்கப்படும் சென்னை புறநகர் சிறப்பு ரயில்களுக்கான கால அட்டவணை கீழ்வருமாறு:-

1) அரக்கோணத்திலிருந்து காலை 08:15, 08:45, 09:15, 09:45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது.

2)சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 8:30, 09:00, 09:30, 10:00 மணிக்கு அரக்கோணம் ரயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது.

3) கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 8:15, 09:00, 09:45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது.

4) சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 8:15, 09:00, 09:45 மணிக்கு கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது.

5) வேளச்சேரியிலிருந்து காலை 8:20 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது.

6) தாம்பரத்திலிருந்து காலை 09:00, 10:00 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது.

7) செங்கல்பட்டிலிருந்து காலை 09:00, 10:00 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது.

8) சென்னை கடற்கரையிலிருந்து காலை 08:30, 09:30 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது.

9) சென்னை கடற்கரையிலிருந்து காலை 09:00, 10:00 மணிக்கு திருவள்ளூர் ரயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதியம் முதல் நாளை காலை வரை வானிலை மாற்றங்களுக்கேற்ப புறநகர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
27-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee