உலகம்

பிரசவத்தில் மனைவி உயிரிழப்பு: கொரோனா பரவல் காரணமாக 8 மாதங்களுக்கு பிறகு குழந்தையை சந்தித்த வாலிபர்

கொரோனா பரவல் காரணமாக பிரசவத்தில் மனைவியை இழந்த வாலிபர் கிட்டத்தட்ட 8 மாதங்கள் கழித்து தனது குழந்தையை சந்தித்த சம்பவம் பலரது இதயங்களையும் கனக்க செய்துள்ளது.

காட்மண்டு:-

நேபாள தலைநகர் காட்மண்டுவை சேர்ந்தவர் யுப்ராஜ் பூசல் (வயது 30). இவர் துபாயில் உள்ள தனியார் கல்லூரியில் நீச்சல் குளத்தின் பாதுகாப்பு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது கர்ப்பிணி மனைவி மினா சொந்த ஊரில் வசித்து வந்தார். 

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் யுப்ராஜின் மனைவிக்கு ஜலந்தா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த ஒரு சில நாட்களில் மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

அப்போது கொரோனா பரவல் காரணமாக அனைத்து நாடுகளும் தங்கள் எல்லைகளை மூடியிருந்தது. இதனால் யுப்ராஜால் தனது சொந்த ஊருக்கு திரும்ப முடியவில்லை. இதனால் தொடர்ந்து 8 மாதங்கள் மனைவியை இழந்து தனது குழந்தையை காணாமல் தவித்து வந்தார்.

இதனிடையே சக ஊழியர்கள் உதவியுடன் சொந்த ஊருக்கு சென்றார். அங்கு தலைநகர் காட்மான்டு அருகே மலைக்கிராமம் ஒன்றில் சிறிய குடிசையில் தனது மகள் ஜலந்தாவுடன் விடுமுறையை கழித்து வருகிறார். அடுத்த மாதம் இறுதியில் யுப்ராஜ் துபாய் திரும்ப உள்ளார். வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த தொழிலாளி மனைவியை இழந்த நிலையில் பிறந்த குழந்தையை கிட்டத்தட்ட 8 மாதங்கள் கழித்து சந்தித்த சம்பவம் பலரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
23-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee