இந்தியா

உ.பி.ல் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம் யோகி ஆதித்யநாத் அதிரடி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கட்டாய மதமாற்றம் செய்தால் பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 50 ஆயிரம் அபராதமும் விதிக்கும் சட்டத்திருத்தத்துக்கு செய்ய அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

லக்னோ:- 

‘லவ் ஜிஹாத்’ எனப்படும் திருமணம் மூலம் மதமாற்றம் செய்தால்  3-10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ .50,000 அபராதமும் விதிக்கும் சட்டத்திருத்தத்துக்கு செய்ய அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

காதலித்து மணம் முடிப்பதற்காக மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்துவது லவ் ஜிகாத் என்று அழைக்கப்படுகிறது. இதனைத் தடுக்க யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கட்டாய மதமாற்றம், பெருமளவு மதமாற்றம் செய்யப்படுவதைத் தடுக்க சட்டம் இயற்ற முடிவு செய்து வரைவு மசோதாவை தயாரித்துள்ளது.

‘சட்டவிரோத மதமாற்ற தடை மசோதா 2020’ என்ற சட்டத்திருத்தத்துக்கு  ஒப்புதல் அளிக்கும் முடிவை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச அரசாங்க செய்தித் தொடர்பாளரும் மாநில அமைச்சருமான சித்தார்த் நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், கட்டாயமாக மாற்றம் தொடர்பாக 100 க்கும் மேற்பட்ட வழக்குகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பொய்கள், ஏமாற்றுதல், நெருக்கடி மற்றும் கட்டாயத்தின் பேரில் மத மாற்றங்கள் செய்யப்படுவது பலர் கூறியுள்ளனர். எனவே இது தொடர்பாக ஒரு சட்டம் இருக்க வேண்டியது அவசியம் என்று கூறினார்.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
23-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee