உலகம்

கூகுள் நிறுவனம் மீது ரஷிய அரசு வழக்கு

ரஷியாவில் ‘கூகுள் சர்ச்’ தேடுபொறி தடை செய்யப்பட்ட உள்ளடக்கங்களை நீக்க தவறி விட்டதாக கூறி கூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

மாஸ்கோ:-

இணைய தேடலில் கூகுள் நிறுவனத்தின் ‘கூகுள் சர்ச்’ எனப்படும் தேடுபொறி பயனாளர்களின் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. இந்நிலையில் ரஷியாவில் ‘கூகுள் சர்ச்’ தேடுபொறி தடை செய்யப்பட்ட உள்ளடக்கங்களை நீக்க தவறி விட்டதாக கூறி கூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

இதுகுறித்து ரஷியாவின் தகவல் கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் “பயங்கரவாதம், ஆபாசம் மற்றும் தற்கொலையை தூண்டுவது உள்ளிட்ட ஆபத்தான உள்ளடக்கங்களை அகற்ற கூகுள் தவறிவிட்டது என்று கூறி கூகுள் நிறுவனத்துக்கு எதிராக ரஷ்யாவின் ஊடக தணிக்கை நிறுவனமான ரோஸ்கோம்னாட்ஸர் வழக்கு தொடர்ந்துள்ளது.

மேலும், கூகுள் அதன் தேடல்களில் இருந்து தடைசெய்யப்பட்ட உள்ளடக்கத்தில் 30 சதவீதம் வரை அகற்றத் தவறிவிட்டது. இந்த “ஆபத்தான உள்ளடக்கம்” தீவிரவாத, ஆபாச மற்றும் தற்கொலை தொடர்பான தகவல்களை உள்ளடக்கியது. ரஷ்ய சட்டம் கூகுள் மற்றும் பிற தேடுபொறி ஆபரேட்டர்கள் ரோஸ்கோம்நாட்ஸரின் பதிவேட்டைப் பயன்படுத்தி தடைசெய்யப்பட்ட தளங்களை அவற்றின் தேடுதல்களிலிருந்து அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது மட்டுமல்லாமல் 65 ஆயிரத்து 670 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 48 லட்சத்து 60 ஆயிரம்) அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
ரஷ்ய அரசின் நடவடிக்கை குறித்து கூகுள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
23-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee