சென்னை தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
சென்னை தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
சென்னை:-
வங்க கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் காரணமாக சென்னையில் ஏற்பட்ட தொடர் கனமழையால் நீர் சென்னை குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரத்து அதிகரித்தது. மொத்தம் 24 அடியை கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 22 அடியை நெருங்கியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக வினாடிக்கு 1000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், சூழ்நிலையைப் பொறுத்து நீர் திறப்பு அதிகரிக்கக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொத்தம் 19 மதகுகள் உள்ள நிலையில் 7 மதகுகள் திறக்கப்பட்டுள்ளது, தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்தால் நொடிக்கு 7000 கன அடி நீர் வெளியேற்ற படக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தில் போது செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட நிலையில் தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது.