இந்தியா

அயோத்தி விமானநிலையத்திற்கு "ஸ்ரீராமர்" பெயர்- யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி விமானநிலையத்திற்கு "ஸ்ரீராமர்" பெயர் சூட்டுவதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

லக்னோ:-

அயோத்தியில் அமையவுள்ள விமான நிலையத்திற்கு "மரியாடா புருஷோத்தம் ஸ்ரீராம்" என்று  பெயரிடும் ஸ்ரீராமரின் பெயரை சூட்டும் திட்டத்திற்கு உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை விமான நிலையத்திற்கான  "ஸ்ரீராமர்" பெயர் சூட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளதாக மாநில அரசு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. 

மேலும், அயோத்தியில் அமையவுள்ள விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேச அரசு அயோத்தியின் வளர்ச்சியிலும், உலகளாவிய மத சுற்றுலா தளமாக அதனை மேம்படுத்துவதிலும் ஈடுபட்டுள்ளது. அதோடு, அயோத்தியின் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, சுற்றுலா போன்றவற்றின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உலகளாவிய ஆலோசகரை நியமிக்கும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

அயோத்தி விமான நிலையத்திற்கு பெயர் சூட்டுதல் உத்தரபிரதேச அரசின் 21 வெவ்வேறு திட்டங்களில் ஒன்றாகும், உத்தரபிரதேச விதி விருத் தர்ம் சம்பரிவர்த்தன் பிரதிஷ்டே ஆத்யதேஷ் 2020 (சட்டவிரோத மத மாற்ற கட்டளை 2020 க்கு உ.பி. தடை) உட்பட பல சட்டங்களுக்கு உ.பி. அமைச்சரவை ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
23-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee