தமிழ்நாடு

கடலூருக்கு 240 கிலோ மீட்டர் தொலைவில் வேகமாக நகரும் நிவர் புயல்

வங்க கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் வேகம் அதிகரித்து வேகமாக நகர்ந்து வருவதாக தென் மண்டல வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் புயல் கரையை கடக்கும் பொழுது மணிக்கு 145 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னை:-

நிவர் புயல் கடலூருக்கு 240 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு 250 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 300 கிலோ மீட்டர் தொலைவிலும் தற்போது மையம் கொண்டுள்ளது. 
தற்போது நிவர் புயலின் சுழல் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர் முதல் 115 கிலோ மீட்டர் வேகத்தில் உள்ளது என்று  தென் மண்டல வானிலை மையம் என்று கூறியுள்ளது.

மேலும், புயல் கரையை கடக்கும் பொழுது மணிக்கு 145 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது வங்கக்கடலில் நகரும் நிவர் புயலின் வேகம் 7 கிலோ மீட்டரில் இருந்து 11 கிலோமீட்டர் ஆக அதிகரித்து நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நிவர் புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 15 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என்றும், குறிப்பாக  தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
23-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee