தமிழகத்தில் நிவர் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் பேரிடர் உதவி பணிகளுக்காக மக்கள் நீதி மய்யத்தினர் தயாராக உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிவர் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் பேரிடர் உதவி பணிகளுக்காக மக்கள் நீதி மய்யத்தினர் தயாராக உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை:-
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தம், அதிதீவிர நிவர் புயலாக வலுவடைந்துள்ளது. நிவர் புயல் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவு 145 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், சில மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சென்னையில் தொடர் கனமழை பெய்து வருகிறது. எனவே, புயல் பாதிப்புக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மற்றும் பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் புயலால் ஏற்படும் சேதங்களை சரி செய்யவும், மக்களுக்கு உதவவும் மீட்பு படையினர் அனைத்து பகுதிகளிலும் தயாராக உள்ளனர். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்ய கட்சி தொண்டர்கள் பலர் மீட்பு பணிகளில் உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கமல் தெரிவித்துள்ளதாவது:-
உத்தரவு கேட்டு உதவிக்குப் போவதில்லை
— Kamal Haasan (@ikamalhaasan) November 25, 2020
ரத்தத்தில் உண்டே உதவுமனம் - எத்தனையோ
பத்தாண்டு காலமாய் நற்பணிகள் செய்துவரும்
வித்தன்றோ எந்தன் படை!
பேரிடர் உதவிப் பணியில் இறங்கியிருக்கும் மக்கள் நீதி மய்யப் படையணிக்கு வாழ்த்துகள்.
உத்தரவு கேட்டு உதவிக்குப் போவதில்லை
ரத்தத்தில் உண்டே உதவுமனம் - எத்தனையோ
பத்தாண்டு காலமாய் நற்பணிகள் செய்துவரும்
வித்தன்றோ எந்தன் படை!
பேரிடர் உதவிப் பணியில் இறங்கியிருக்கும் மக்கள் நீதி மய்யப் படையணிக்கு வாழ்த்துகள் என கூறியுள்ளார்.