சினிமா

2 வருடத்தில் 4 முறை தற்கொலைக்கு முயன்றேன் - நடிகர் அமித் சாத்

சல்மான்கானின் படத்தில் நடித்து பிரபலமான நடிகர் அமித் சாத், 2 வருடத்தில் 4 முறை தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார்.

மும்பை:-

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது திரையுலகில் பெறுமதிர்வலைகளை உண்டாக்கியது. இந்நிலையில் சல்மான்கானின் சுல்தான் படத்தில் நடித்து பிரபலமான நடிகர் அமித் சாத்   2 வருடத்தில் 4 தடவை தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.  

இது குறித்து அமித் சாத் அளித்துள்ள பேட்டியில்:-

சில காரணங்களால் எனக்கு தற்கொலை உணர்வு ஏற்பட்டது. 16-வது வயதில் இருந்து 18-வது வயது வரை 4 தடவை தற்கொலைக்கு முயற்சி செய்தேன். திடீரென்று எனது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது. தற்கொலை செய்து கொள்வது சரியான முடிவு அல்ல என்று உணர்ந்தேன். 

எனது பயத்தில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக வெளியே வந்தேன். தற்கொலை உணர்வில் இருந்து வெளியே வருவதில்தான் உண்மையான வலிமை இருக்கிறது. வாழ்க்கை நமக்கு கிடைத்துள்ள பரிசு” என்று கூறியுள்ளார்.

அமித் சாத்  சூப்பர், கோல்டு, அகிரா, யாரா, சகுந்தலா தேவி உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்து இருக்கிறார். தவிர இந்தி தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் வெப் தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
24-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee