தமிழ்நாடு

கரையை கடந்தது நிவர்; வட மாவட்டங்களில் கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை தொடரும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை:-

வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று மாலை அதிதீவிர புயலாக வலுவடைந்தது. அதிதீவிர புயலாக மாறிய பின்னர் நேற்று மாலை 5.30 மணிக்கு கரையை நோக்கி 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது. 

நிவர் புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை கொட்டித்தீர்த்தது.

இதனிடையே, நிவர் புயல் புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் அருகே இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை முழுவதும் கரையை கடந்தது. அப்போது, புதுச்சேரி உள்பட சில பகுதிகளில் மணிக்கு 120 முதல் 140 கிலோ மீட்டர் வரை பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.

இந்நிலையில், புயல் கரையை கடந்ததை தொடர்ந்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

நிவர் புயலானது புதுச்சேரி அருகே இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 வரை புயல் கரையை கடந்தது. புயல் தற்போதுவரை தமிழகத்தின் நிலப்பகுதியில் தான் உள்ளது. இதன் காரணமாக காற்றும், மழையும் தொடரும். குறிப்பாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை தொடரும். தீவிரபுயல் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழந்து புயலாக மாறி அதிக கனமழையை தரும் என்று கூறினார்.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
23-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee