உலகம்

பெண்களுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்களை வழங்க முடிவெடுத்த முதல் நாடு

பெண்களுக்குக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்களை வழங்க வகை செய்யும் மசோதா ஒரு நாட்டின் பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

எடின்பர்க்:-

அனைத்து பெண்களுக்கும் மாதவிடாய்கால தயாரிப்புகளை இலவசமாக வழங்கும் உலகின் முதல் நாடாக ஸ்காட்லாந்து மாறியுள்ளது. இதற்கான கால தயாரிப்புகள் (இலவச வழங்கல்) (ஸ்காட்லாந்து) மசோதாவுக்கு (Period Products (Free Provision) (Scotland) Bill) ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. 

இதன்படி நாடு முழுவதும் பொது இடங்கள், பள்ளிகள் கல்லூரிகள் என கல்வி நிலையங்களிலும், பொது இடங்களிலும் பெண்களுக்கு தேவையான சானிட்டரி பேட்கள் மற்றும் டம்பான்கள் போன்ற மாதவிடாய்கால பொருட்கள் தேவைப்படும் எவருக்கும் இலவசமாக கிடைப்பதை உறுதி செய்வது ஸ்காட்டிஷ் அரசாங்கத்தின் சட்டப்பூர்வ கடமையாகும்.

மோனிகா லெனான் என்ற பெண் நாடாளுமன்ற உறுப்பினர் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். வறுமை காரணாமக சானிட்டரி நாப்கின் மற்றும் அது சார்ந்த பொருட்களை சில பெண்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்படுவதால் அந்த பொருட்களை நாட்டு பெண்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கும் வகையில் மசோதா கொண்டுவரப்பட்டது.

அந்த மசோதா மீதான விவாதம் ஸ்காட்லாந்து பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அந்த விவாதத்திற்கு பின் சானிட்டரி நாப்கின்கள் மற்றும் அதுசார்ந்த பொருட்களை பெண்களுக்கு இலவசமாக வழங்க வகை செய்யும் மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.

வாக்கெடுப்பில் மசோதாவிற்கு பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 121 உறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர்.  இதன் மூலம் மசோதா சட்டமாக உருவாகியுள்ளது. இதையடுத்து, பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் மற்றும் அது சார்ந்த பொருட்களை இலவசமாக வழங்கும் முதல் நாடு என்ற பெருமையை ஸ்காட்லாந்து பெற்றுள்ளது. மேலும், ஸ்காட்லாந்து அரசின் முடிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
19-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee