உலகம்

43 சீன செயலிகளுக்கு தடை; இந்தியாவின் முடிவுக்கு சீனா எதிர்ப்பு

கடந்த செவ்வாய் அன்று 43 சீன செயலிகளுக்கு தடை விதித்த இந்தியாவின் முடிவுக்கு சீனா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

பெய்ஜிங்:-

சீனா தனது செயலிகளை தடை செய்துள்ள இந்தியாவின் நடவடிக்கையையும், அவ்வாறு செய்யும்போது "தேசிய பாதுகாப்பை மீண்டும் மீண்டும் காரணமாக" காட்டப்படுகிறது என்று கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா-சீனா இடையே லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்ட நிலையில், கடந்த ஜூன் 29-ந் தேதி 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. செப்டம்பர் 2-ந் தேதி மேலும் 118 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
 
இந்நிலையில் நேற்று முன்தினம், மேலும் 43 சீன செயலிகளை தடை செய்து உத்தரவிடப்பட்டது. தேச பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இதுகுறித்து நேற்று கருத்து கூறிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஸாவ் லிஜியான்:-

‘இந்தியாவின் இந்த நடவடிக்கை, சந்தை கொள்கைகளுக்கும், உலக வர்த்தக நிறுவனத்தின் விதிகளுக்கும் எதிரானது. சீன நிறுவனங்களின் நியாயமான உரிமைகளையும், நலன்களையும் பாதிப்பதாக உள்ளது. இதை சீனா உறுதியாக எதிர்க்கிறது.

இந்தியா உடனடியாக தனது பாகுபாடான செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் பாதிப்பு அடையாமல் தவிர்க்க வேண்டும்’ என்றார்.
கடந்த சில மாதங்களாக சீனாவுடனான எல்லை மோதலுக்கு பிறகு இந்தியாவில் மொத்தம் 220 சீன செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
19-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee