உலகம்

ஜப்பான் நாட்டில் பரவி வரும் பறவைக் காய்ச்சல்; இந்தியாவிற்கு பாதிப்பு உண்டா???

ஜப்பானில் தொடர்ந்து மூன்றாவது மாகாணத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளதாக ஜப்பான் நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.

டோக்கியோ:-

உலகை கொரோனா வைரஸ் படுத்திவரும் நிலையில் ஜப்பான் நாட்டில் பெருமளவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதாக பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அந்நாட்டில் தொடர்ந்து மூன்றாவது மாகாணத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளதாக ஜப்பான் சுகாதார துறை தெரிவித்துள்ளது. பறவைக் காய்ச்சல் காரணமாக ஜப்பானின் ஹையோகோ மாகாணத்தில் சுமார் 146,000 கோழிகள் அழிக்கப்படவுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. ஹையோகோ பறவைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட மூன்றாவது பிராந்தியமாக மாறியுள்ளது. முன்னதாக, புதன்கிழமை, ஃபுகுயோகா மாகாணத்தில் மேலும் ஒரு பறவைக் காய்ச்சல் வெடிப்பு கண்டறியப்பட்டது.

தற்போது  உலகம் கொரோனா தொற்றுநோயுடன் போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில் ஜப்பானில் பறவைக் காய்ச்சல் பரவி வருவது புதிய சுகாதார நெருக்கடியாக மாறியுள்ளது. இதன் காரணமாக சுகாதார அதிகாரிகள் 10 கிலோமீட்டர் (6 மைலுக்கு மேல்) பகுதிக்கு ஒரு கோழிகள் மற்றும் முட்டைகளின் விற்பனையை தடை செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.

ககாவா மாகாணத்தில் உள்ள ஒரு பண்ணையில் அதிகளவில் H5 நோய்த்தொற்று முதலில் கண்டறியப்பட்டன. மேலும், நவம்பர் 1 மற்றும் 4 க்கு இடையில் கிட்டத்தட்ட 4,000 கோழிகள் இறந்தன. அதன் பின்னர், இந்த பிராந்தியத்தில் மேலும் ஏழு வெடிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதால், மேலும் ஆயிரக்கணக்கான கோழிகளை அழிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இன்றைய (வியாழக்கிழமை) நிலவரப்படி ஜப்பானில் உறுதிப்படுத்தப்பட்டகொரோனா தொற்று எண்ணிக்கை 137,730 ஐ எட்டியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்த பறவை காய்ச்சலால் இந்தியாவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
19-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee