உலகம்

ஒரே அறிவிப்பு மூலம் ஊழியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ள வால்ட் டிஸ்னி நிறுவனம்

2021 ஆம் ஆண்டின் முன் பகுதிக்கு 32 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக பிரபல வால்ட் டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.

கலிஃபோர்னியா:-

கொரோனா பரவல் காரணமாக பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு பார்வையாளர்கள் வருவது குறைந்ததன் எதிரொலியாக  32 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக வால்ட் டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த பணிநீக்கங்கள் 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இருக்கும் என்று டிஸ்னி நிறுவனம் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், பூங்காக்கள் மீண்டும் திறக்க அரசு எப்போது அனுமதிக்கும் என்பது குறித்த நிச்சயமற்ற தன்மையால். டிஸ்னி தெற்கு கலிபோர்னியாவில் உள்ள அதன் தீம் பூங்காவிலிருந்து கூடுதல் தொழிலாளர்களை நீக்க இருப்பதாக கூறியது.

புளோரிடாவில் உள்ள டிஸ்னியின் பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் அமெரிக்காவிற்கு வெளியே உள்ளவை மீண்டும் திறக்கப்பட்டன, ஆனால் கடுமையான கட்டுப்பாடுகளால் மக்கள் வரத்து குறைந்து கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.

கொரோனா வைரசின்  இரண்டாவது அலை காரணமாக பிரான்ஸ் மீண்டும் விதித்த போது டிஸ்னிலேண்ட் பாரிஸ் கடந்த மாத இறுதியில் மீண்டும் மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனிடையே, ஷாங்காய், ஹாங்காங் மற்றும் டோக்கியோவில் உள்ள வால்ட் டிஸ்னிநிறுவனத்தின் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறந்தே உள்ளன.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
19-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee