சினிமா

உடல்நலம் பாதிப்பு; நெருங்கிய மரணம்- பாகுபலி நடிகர் ராணா

தனக்கிருந்த உடல்நலப் பிரச்சினையால் பக்கவாதம் வர 70% வாய்ப்பும், இறந்து போக 30% வாய்ப்புகள் இருந்ததாக நடிகர் ராணா டகுபதி கூறியுள்ளார்.

ஹைதராபாத்:-

தெலுங்கு திரைப்பட நடிகர் வெங்கடேஷின் அண்ணனும்  பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகனுமான ராணா டகுபதி தெலுங்குத் திரையுலகில் கிராஃபிக்ஸ் கலைஞராகத் தனது பணியைதொடங்கினார். மகேஷ் பாபுவின் 'சைனிகுடு' திரைப்படத்தின் கிராஃபிக்ஸ் பொறுப்பை ராணாவுக்கு அதற்காக நந்தி விருது கிடைத்தது.

'லீடர்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான இவர், 'பாகுபலி' படத்தில் வில்லனாக நடித்து தேசிய அளவில் பிரபலமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெவ்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இந்த ஆண்டின் ஆகஸ்டில் ஊரடங்கிற்கு இடையே தனது நீண்ட நாள் காதலியான மிஹீகா பஜாஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில், புகைப்படம் ஒன்றை அவர் சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொண்டார்.  அதில் மிக ஒல்லியாக அவர் காணப்பட்டார்.  இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து, ராணாவின் உடல்நலம் பற்றி கேட்க தொடங்கினர்.

சமீப காலங்களாக அவரது உடல்நலம் பற்றி பல வதந்திகளும் பரவி வந்தன.  எனினும், அவர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், என்னை பற்றி பல புரளிகள் பரவி விட்டன.  அவற்றுக்கு விளக்கம் அளித்து சோர்ந்து விட்டேன்.  நான் நல்ல உடல்நலமுடன் உள்ளேன் என கூறினார்.

ஆனால், ஆஹா ஓடிடி தளத்தில் நடிகை சமந்தா நடத்தும் சாம் ஜாம் என்ற சாட் நிகழ்ச்சியில் ராணா கலந்து கொண்டார்.  அதில் தனது கடந்த கால உடல்நல குறைவு பற்றி வெளிப்படையாக அவர் பகிர்ந்து கொண்டார்.  அவர் பேசும்பொழுது அழுதபடி காணப்பட்டார்.

இதில் பேசிய ராணா, "வாழ்க்கை மிக வேகமாகப் போய்க் கொண்டிருக்கும்போது திடீரென ஒரு நிறுத்தம் வந்தது. பிறந்ததிலிருந்தே எனக்குச் சில உடல் உபாதைகள் இருந்தன. ரத்த அழுத்தம், இதயத்தைச் சுற்றி கால்சியம் அடைத்திருந்தது. சிறுநீரகச் செயல்பாட்டில் பாதிப்பு இருந்தது. இதனால் 70 சதவீதம் ரத்தக் கசிவுக்கான, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் இருந்தன. இறப்பதற்கும் 30 சதவீத வாய்ப்புகள் இருந்தன" என்று குறிப்பிட்டுள்ளார்.

ராணாவைச் சுற்றியிருப்பவர்கள் மனமுடைந்து போனாலும் ராணா ஒரு பாறை போல வலுவாக இருந்தார் என்றும், அதைத் தன் கண்ணாலேயே தான் பார்த்திருப்பதால் ராணா தன்னுடைய சூப்பர் ஹீரோ என்றும் சமந்தா கூறியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் தான் ராணாவுக்கும், மிஹிகா பஜாஜுக்கும் திருமணமத்திற்கு நடுவில் ராணா சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்ததாகச் செய்திகள் வந்தன. ஆனால், இவை புரளிகள் என ராணா தெளிவுபடுத்தியிருந்தார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
19-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee