உலகம்

துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டோருக்கு வாழ்நாள் சிறை

துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து துருக்கிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அங்காரா:-

2016 ஆம் ஆண்டு துருக்கி தலைநகர் அங்காராவுக்கு அருகிலுள்ள ஒரு விமானத் தளத்திலிருந்து இயக்கப்பட்ட அதிபர் தயிப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க நூற்றுக்கணக்கான இராணுவ அதிகாரிகள், விமானிகள்  என்று ராணுவத்தில் ஒரு பிரிவு முயற்சித்தது.  

ஜூலை 15, 2016 ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் டாங்கிகள் என ராணுவம் நகரை கைப்பற்றவும் எர்டோகனின் அரசாங்கத்தை கவிழ்க்கவும் முயன்றது. ஆனால் மக்கள் ஆதரவுடன் அதிபர் அந்த புரட்சியை முறியடித்தார். ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு துருக்கி நீதிமன்றம் வியாழக்கிழமை சிறைத்தண்டனை விதித்தது தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவில் வசித்து வரும் துருக்கியை சேர்ந்த மத குரு பெதுல்லா குலென் தான், ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு காரணம் என தயிப் எர்டோகன் குற்றம் சாட்டினார். அதனை தொடர்ந்து ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தொடங்கினார்.

அதன்படி ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் தொடர்புடையதாக கருதப்படும் ராணுவ அதிகாரிகள், போலீசார் மற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் என ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு தலைமை தாங்கி வழிநடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ராணுவ கமாண்டர்கள், விமானப்படை தலைவர்கள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகள் மீதான வழக்கில் நேற்று இறுதி விசாரணை நடந்தது.

இதில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். எனினும் சரியாக எத்தனை பேருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது என்பது குறித்த தகவலை துருக்கி நீதித்துறை வெளியிடவில்லை.

79 வயதான மதகுரு பெதுல்லா குலென், ஒரு காலத்தில் எர்டோகனின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தவர் ஆவார். இவர் தாம் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபடவில்லை என்று தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்த ஆட்சி கவிழ்ப்பு தொடர்பான வழக்கில் ஆஜராகாத ஆறு பிரதிவாதிகளில் ஒருவர். மேலும்,  அவர்களின் ஆவணங்கள் பிரதான விசாரணையிலிருந்து பிரிக்கப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
19-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee